குலம் (மக்கள்)

குலம் அல்லது கூட்டம்என்பது உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கட் குழுவாகும். பொதுவாகக் குலம் ஓரளவு பெரியது. குலமொன்றின் உறுப்பினர்கள், பல தலைமுறைகளுக்கு முற்பட்ட ஒரு பொது முன்னோனைக் கொண்டிருப்பார்கள் (உ.ம்: ஒரு பூட்டனையோ, கொள்ளுப் பாட்டனையோ அல்லது இன்னும் முற்பட்ட ஒரு முன்னோனையோ பொதுவாகக் கொண்டிருக்கலாம்). பாட்டன் பாட்டியை மட்டும் பொதுவாகக் கொண்ட உறவுமுறைக் குழுக்கள் கூட்டுக் குடும்பம் என்று அழைக்கப்படுமேயன்றி குலம் என்று அழைக்கப்படுவதில்லை. சில குலங்கள் மிகவும் பெரிதாகவும், பழமையானவையாகவும் இருப்பதால் அவைகள் "விதிக்கப்பட்ட" (stipulated) பொது முன்னோரைக் கொண்டிருப்பர்; அதாவது பொது முன்னோர் பற்றிய சான்றுகள் எதையும் கொண்டிராமல், கற்பனையான, குலத்தின் ஒருமைப்பாட்டுக்கான ஒரு குறியீடாகவே இருக்கும். சில சமூகங்களில் இந்த முன்னோர் மனிதராகக் கூட இருப்பதில்லை; ஒரு குலக்குறியாக மட்டும் இருக்கும். In certain societies this ancestor is not even human; he or she is an animallian totem.

சில குலங்கள் தந்தைக்கால்வழிப்பட்டவை, அதாவது இதன் உறுப்பினர் ஆண் வழியால் உறவு கொண்டவர்கள். வேறு சில தாய்க்கால்வழிப்பட்டவை; இதன் உறுப்பினர் பெண் வழி உறவுமுறை உள்ளவர்கள். இன்னும் சில ஒரு பொது முன்னோரின், ஆண், பெண் இருவழியையும் சேர்ந்த சகலரையும் கொண்ட "இருவழி"யானவை. ஸ்கொட்லாந்திலுள்ள குலங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். ஒரு குலம், தந்தைக்கால்வழியோ, தாய்க்கால்வழியோ அல்லது இருவழிப்பட்டதோ என்பது குறிப்பிட்ட குலம் வாழும் பண்பாட்டின் உறவுமுறை விதிகளில் தங்கியுள்ளது.

வெவ்வேறு பண்பாடுகளிலும், சந்தர்ப்பங்களிலும், ஒரு குலம் என்பது உறவுமுறையை அடிப்படையாகக் கொண்ட குழுக்களான குலக்குழுக்கள், பழங்குடிகள் தரும் அதே பொருளையே தரக்கூடும். எனினும் வழக்கமாக, குலம் என்பதை வேறுபடுத்தும் காரணி, அது பழங்குடி, chiefdom, அல்லது அரசு போன்ற பெரிய குழுக்களின் ஒரு பகுதியாகச் சிறிதாக இருப்பதேயாகும். ஸ்கொட்டிஷ், சீன மற்றும் ஜப்பானியக் குலங்கள், முறையே ஸ்கொட்டிஷ், சீன, ஜப்பானிய சமூகங்களில் உறவுமுறைக் குழுக்களாக இருப்பது இதற்கு எடுத்துக்காட்டாகும். பழங்குடிகள் குலக்குழுக்கள் என்பனகூட பெரிய சமூகங்களின் பகுதிகளாக இருக்கக்கூடும்; அராபியப் பழங்குடிகள் அராபிய சமூகத்தினுள் ஒரு பகுதியாகவும், ஒஜிப்வா குலக்குழுக்கள் ஒஜிப்வா பழங்குடியின் ஒரு பகுதியாகவும் உள்ளன.

பெரும்பாலான குலங்கள் புறமண முறைமையைக் கொண்டவை, அதாவது, இக் குலங்களின் உறுப்பினர் தங்களுக்குள் மணம் செய்ய முடியாது. சில குலங்கள் chieftain, தாய்த் தலைமை அல்லது தந்தைத் தலைமை போன்ற ஒரு தலைமைத்துவத்தையும் கொண்டிருக்கக்கூடும்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.