குற்றம்
குற்றம் என்பது விதிகளையோ அல்லது சட்டத்தையோ மீறி செய்யப்படும் செயலாகும். இத்தகைய செயல் அதிகாரத்தில் உள்ளவர்களால் தண்டனைக்கு (சட்ட மன்றம் போன்ற அமைப்புகளால்) உட்படுத்தப்படலாம். அல்லது எச்சரிக்கை விடுக்கப்படலாம். குற்றத்திற்கான வரையறை வெவ்வேறு (மாநில, தேசிய, சர்வதேச) இடம், வெவ்வேறு காலகட்டத்தைப்பொறுத்து ஒவ்வொறு தனிமனித சமுதாயத்துக்கும் மாறுபடலாம். ஒவ்வொறு குற்றமும் சட்டமீறலாகும்; ஆனால் ஒவ்வொறு சட்டமீறலும் குற்றமாக வேண்டிய அவசியமில்லை.
வகைகள்
குற்றங்களின் பின்வரும் வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன அல்லது பயன்படுத்தப்பட்டு வருகின்றன:
- தனி நபருக்கு எதிரான குற்றம்
- வன்முறை தொடர்பான குற்றம்
- பாலியல் வன்முறை தொடர்பான குற்றம்
- சொத்து தொடர்பான குற்றம்
ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தும் பின்வரும் வகைகளாக குற்றங்கள்:
- மோசடி மற்றும் ஆள்மாராட்டம்
- துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் மூலமாக தாக்குதல்
- மத்திய அல்லது மாநில அரசுக்கு எதிரான குற்றம் / அரசியல் குற்றங்கள்
- தீங்கு விளைவிக்கும் அல்லது ஆபத்து விளைவிக்கும் போதைப் பொருட்களை கடத்துதல்
- மதம் மற்றும் பொது வழிபாட்டு எதிரான குற்றம்
- பொது நீதி / பொது நீதி நிர்வாகத்திற்கு எதிரான குற்றம்
- பொது ஒழுங்குமீறல்
- வணிகம், நிதி சந்தைகள் போன்றவற்றில்
- பொது ஒழுக்கம் மற்றும் பொது கொள்கை எதிரான குற்றம்
- மோட்டார் வாகன குற்றங்கள்
- சதி, அடுத்தவரை குற்றம் செய்ய தூண்டுதல் மற்றும் குற்றம் செய்ய முயற்சி செய்தல் உள்ளிட்டவையாகும்.
இவற்றையும் பார்க்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.