குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்கெழுத்துப் புதிர் என்பது குறுக்கும் நெடுக்குமாக வரையப்படும் கோடுகளைனால் உருவாகும் கட்டங்களுக்கு இலக்கங்கள் இடப்பட்டு அக்கட்டங்களைச் சொற்களைக் கொண்டு நிரப்புவதற்கு உதவிக் குறிப்புகள் வழங்கப்படும் புதிர் ஆகும். குறுக்கெழுத்துப் புதிர்கள் பத்திரிகைகளில் பெருமளவில் வெளிவருகின்றன. அவற்றுக்கென வெளியாகும் நூல்களும் உள்ளன.

இக்குறுக்கெழுத்துப் புதிரினை முதன்முதலில் அறிமுகம் செய்தவராக அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் வைன் இனங்காணப் பட்டுள்ளார். 1913ஆம் ஆண்டில் "நியூயோர்க் வேர்ல்ட்" பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற இவர் அவ்வாண்டு கிறிஸ்மஸ் சிறப்பு மலரில் குறுக்கெழுத்துப் புதிரினை அறிமுகம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து ஏனைய அமெரிக்கப் பத்திரிகைகளும் குறுக்கெழுத்துப் புதிர்களை வெளியிடத் தொடங்கின. பின்னர் இங்கிலாந்துக்குப் பரவிய இப்புதிர் இப்பொழுது உலகெங்கும் பிரபல்யம் பெற்றுள்ளது.