குரோ உறவுமுறை

குரோ உறவுமுறை, எஸ்கிமோ, ஹவாய், இரோகுவாயிஸ், குரோ, ஒமஹா, சூடான் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ள உறவு முறைகளுள் ஒன்றாகும். இது, அமெரிக்காவில் வாழும் குரோ (Crow) இந்திய இனத்தவர் மத்தியில் காணப்பட்டதால், 1871 ஆம் ஆண்டில் உறவுமுறைகளைப் பற்றி ஆராய்ந்து நூலெழுதிய லூயிஸ் ஹென்றி மார்கன் (Louis Henry Morgan) என்பார், குரோ என்னும் பெயரை இம்முறைமைக்கு இட்டார்.

உறவுமுறைகளுக்குப் பெயரிடும் ஆறு முறைகளில் ஒன்றான குரோ முறையை விளக்கும் படம்.

குரோ உறவுமுறை தாய்க் கால்வழியைத் தழுவியது. இதனால், தாய்வழியைச் சார்ந்த உறவினர்கள் இம்முறையில் முக்கியத்துவம் பெறுகின்றனர். பேசுனர் தாயின் உறவினர்களுடன் நெருங்கிய உறவைப் பேணுகின்றனர். இது தாய்வழி உறவினரின் உறவுமுறைப் பெயர்களிலும் வெளிப்படுகின்றது. தாயின் சகோதரனும், அவன் ஆண், பெண் மக்களும் தனித்தனி உறவுப் பெயர்களினால் குறிப்பிடப் படும் அதேவேளை, தந்தையின் சகோதரியின் மக்களில் ஆண்கள், தந்தையோடும், அவர் ஆண் சகோதரர்களோடும் பொதுவான உறவுமுறைப் பெயர்களையும், பெண் மக்கள் அவர்களுடைய தாய்மாருடன் ஒரே உறவுப் பெயரையும் பகிர்ந்து கொள்கின்றனர். இங்கே, ஆண், பெண் வேறுபாடுகள் மட்டுமே காட்டப்படுகின்றன. தலைமுறை வேறுபாடுகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

பெரும்பாலான உறவுமுறை முறைமைகளைப் போலவே குரோ முறையிலும், தாயின் சகோதரிகளும், தாயும் ஒரே உறவுப் பெயரால் குறிக்கப்பட, தந்தையின் ஆண் சகோதரரும், தந்தையும் ஒரே பெயரால் குறிக்கப்படுகின்றனர்.

எடுத்துக்காட்டு

கீழேயுள்ள அட்டவணை குரோ முறைக்கு எடுத்துக்காட்டான அக்கான் இன உறவுமுறைப் பெயர்களைத் தமிழ்ப் பெயர்களுடன் ஒப்பிட்டுக் காட்டுகின்றது.

தமிழ் உறவுமுறைப் பெயர்கள்உறவுமுறைகள்அக்கான் உறவுமுறைப் பெயர்கள்
அப்பாதந்தைஅக்யா (akya)
தந்தையின் சகோதரன்
மாமன்தாயின் சகோதரன்வோஃபா (wofa)
அண்ணன், தம்பிசகோதரன்நுவா (nua)
தந்தையின் சகோதரனின் மகன்
தாயின் சகோதரியின் மகன்
மச்சான்தந்தையின் சகோதரி மகன்அக்யாவாபா (akyawaba)
தாயின் சகோதரன் மகன்வோஃபாபா (wofaba)
மகன்மகன்பா (ba)
சகோதரன் மகன்
மருமகன்சகோதரி மகன்வோஃபாசே (wofase)

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.