குருதிநச்சு பிளேக்கு

குருதிநச்சு பிளேக் (Septicemic plague அல்லது septicaemic plague) இரத்தவோட்டத்தில் தொற்றும் கடுமையான நோயாகும். பிளேக் நோயின் மூன்று வகைகளில் இதுவும் ஒன்றாகும். இது எர்சினியா பெசுட்டிசு என்ற பாக்டீரியாவினால் உருவாகின்றது.

குருதிநச்சு பிளேக் நோயில் நோய் தொற்றிய குருதியணுக்கள் ஒன்றுகூடி சிறு கட்டிகளை உருவாக்குகின்றன. தகுந்த சிகிட்சை அளிக்கப்படாவிட்டால் உயிரிழப்பது பெருமளவில் உறுதியாகும். தொன்மைக்காலத்தில் இறப்பு வீதம் 99-100 விழுக்காடாக இருந்தது. 1348இல் ஐரோப்பாவில் பரவிய மூன்று பிளேக் வகைகளில் இது மிக அரிதானது. இந்த நோய் நோய்தொற்றிய கொறிணி அல்லது பூச்சி கடிப்பதால் உண்டாகின்றது. மிக அரிதாக தோலுள்ள திறப்பு வழியாகவோ மற்ற மனிதரொருவரின் இருமலிலிருந்தோ தொற்றலாம். இந்த நோயில் பாக்டீரியாக்கள் விரைவாக இரத்தத்தில் பெருகுகின்றன; இவற்றின் நச்சுப்பொருள் குழலுள் பரவிய உறைவுத்தன்மையை ஏற்படுத்துகின்றன. (DIC) இந்த இரத்த சிறுகட்டிகள் உடலெங்கும் பரவி சில பகுதிகளுக்கு இரத்தம் செல்வதை அடைக்கின்றன. இதனால் அங்குள்ள உயிரணுக்கள் இறக்கின்றன. உடலின் இரத்தம் உறைகின்ற தன்மை பாதிக்கப்படுவதால் குருதிப்போக்கை நிறுத்துகின்ற இயல்பை இழக்கிறது; இதனால் தோலினுள்ளும் மற்ற அவயங்களிலும் இரத்தம் கசிகின்றது. இதனை தோலில் சிவப்பு அல்லது கருப்பு பட்டைகளாக காணலாம். மேலும் குடலுள் கசிந்த இரத்தம் வாந்தியாகவோ இருமல் வழியாகவோ வெளியேற்றப்படுகின்றது. உடலின் சில பகுதிகளில் காணப்படும் வீக்கங்கள் பூச்சிக்கடி போன்றுள்ளன. நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கொண்டு துவக்கத்திலேயே சிகிட்சை அளிக்கப்பட்டால் இறப்பு வீதத்தை 4 முதல் 15 % குறைக்கலாம். நோய் கண்ட 24 மணி நேரத்திற்குள் சிகிட்சை துவங்கப்பட வேண்டும்.

உணர்குறிகள்

[1]

குறிப்பு: குருதிநச்சு பிளேக்கின் உணர்குறிகள் வெளிப்படுவதற்கு முன்னமே கூட உயிர் பிரியலாம்.

தொன்மைக்காலத்தில் குருதிநச்சு பிளேக்

1348 முதல் 1350 வரை ஏற்பட்ட மூன்று பிளேக் கொள்ளைநோய்களில் குருதிநச்சு பிளேக் மிகவும் அரிதானதாக இருந்தது. மற்றவற்றைப் போலன்றி இவ்வகைப் பிளேக் கிழக்கிலிருந்து கருங்கடல் வழியாக நடுநிலக் கடல் பகுதிகளில் பரவியது. முக்கிய துறைமுக நகரங்களான வெனிசு, பிளாரென்சு போன்றவை மிகவும் கூடுதலாக பாதிக்கப்பட்டன. The three plagues that are part of the கறுப்புச் சாவின் அங்கங்களாக இருந்த மூன்று வகை பிளேக்குகளுமே 1381இல் நடந்த விவசாயிகளின் புரட்சிக்கு காரணமாயிருந்தன.

தொடர்புள்ள பக்கங்கள்

மேற்சான்றுகள்

  1. Medline Plus - Plague, NIH, http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/000596.htm, பார்த்த நாள்: 2011-03-24

வெளி இணைப்புகள்

Google Health - Plague
HowStuffWorks - "Septicemic Plague"

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.