குருக்ஷேத்திரம்
ஹரியானாவில் டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள குருக்ஷேத்திரம் டெல்லியில் இருந்து 160 கி.மீ. தூரத்தில் உள்ளது. இது மஹாபாரதப் போர் நடைபெற்ற இடமாகும். கௌரவர்களின் முன்னோர்களில் ஒருவரான குரு என்னும் அரசனால் இதற்கு குருக்ஷேத்திரம் என்ற பெயர் உண்டாயிற்று என்று கூறுவர். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் யுத்தம் ஏற்பட்டது இவ்விடத்தில் தான்.இங்குள்ள தானேஸ்வரம் ஹர்ஷ சக்கரவர்த்தியின் தலைநகரமாக விளங்கியது.
குருக்ஷேத்திரகுளம்:
ஸிந்நிஹிக்குளம் என்றழைக்கப்படும் குருக்ஷேத்திரக்குளம் 4000 அடி நீளமும், 2000 அடி அகலமும் உடையது. சூரிய கிரகணத்தின் போது இக்குளத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் நீராடி பிதிர்க் கடன் கழிக்கிறார்கள். குருக்ஷேத்திரப் போர் முடிவில் அம்புப்படுக்கையில் உத்தராயணத்த எதிர் நோக்கிப் ப்டுத்திருந்த பீஷ்மரின் தாகத்தைத் தணிக்க அர்ச்சுனன் அம்பெய்து நீர் வரவழைத்த குளமே குருக்ஷேத்திரக்குளம் என்கின்றனர்.[1]
மேற்கோள்கள்
வார்ப்புரு:வட இந்தியக் கோட்டைகள்,அசோகன் பதிப்பகம், பக்64.
- வட இந்தியக் கோட்டைகள்,அசோகன் பதிப்பகம், பக் 64.