கும்ரான்

கும்ரான் (Qumran, எபிரேயம்: קומראן; அரபு மொழி: خربة قمران Khirbet Qumran) என்பது மேற்குக் கரையில் அமைந்துள்ள ஓர் தொல்பொருளியற் களம். இது இசுரேலிய குடியிருப்புப் பகுதி, கிப்புட்சு ஆகியவற்றுக்கு அருகில், சாக்கடலின் வடமேற்கு கரையிலிருந்து ஒரு மைல் தொலைவில் வரண்ட பீடபூமி மீது அமைந்துள்ளது. கெலேனிய கால குடியிருப்பு ஜோன் கைக்கானூசு ஆட்சிக்காலத்தில் கி.மு 134-104 க்கு இடைப்பட்ட அல்லது பிற்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டு, கி.பி 68 அல்லது அதன் பின்னர் உரோமைப் பேரரசால் அழிக்கப்படும் வரை குடியிருப்பாக இருந்தது. சாக்கடல் ஏட்டுச்சுருள்கள் மறைத்து வைக்கப்பட்ட, நேரான பாலைவன செங்குத்துப் பாறைகள், தாழ்வுப் பகுதிகள் சுண்ணாம்பு களிமண் கலவை சம மேல் தளம் கொண்ட கும்ரான் குகைகளுக்கு அண்மித்த குடியிருப்புக்கள் நன்றாக அறியப்பட்டவை.

கும்ரான்
Qumran
קומראן
خربة قمران
கும்ரான் குகைகள்
Shown within Palestinian territories
இருப்பிடம்மேற்குக் கரை
பகுதியூதேயா
ஆயத்தொலைகள்31°44′27″N 35°27′31″E
வகைகுடியிருப்பு
வரலாறு
கட்டப்பட்டதுகி.மு 134-104 க்கு இடைப்பட்ட அல்லது பிற்பட்ட காலம்
பயனற்றுப்போனதுகி.பி 68 அல்லது அதன் பின்னர்
காலம்கெலேனிய காலம் முதல் உரோமைப் பேரரசு வரை

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.