குமாரதாரா ஆறு
குமாரதாரா ஆறு (Kumaradhara River) இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் ஓடும் ஆறு ஆகும். இந்த ஆறானது நேத்ராவதி ஆறுடன் உப்பினன்காடி எனும் இடத்தில் இணைகிறது. பின்னர் இந்த ஆறானது அரபிக் கடலில் கலக்கிறது.[1] இந்த இரு ஆறுகளும் இணையும் இடம் உள்ளூர் மக்களுக்கு சிறப்பான ஒன்றாகும். இதை சங்கம் என்று அழைக்கின்றனர். இந்த ஆற்றங்கரையில் அமைந்துள்ள குக்கி சுப்ரமண்ய கோயிலின் கடவுளான சுப்ரமண்யரைத் தரிசிக்க மக்கள் இந்த ஆற்றில் புனித நீராடிச் செல்லும் வழக்கம் உள்ளது. இந்த ஆற்றின் அமைவிடம் 13.8333°N 76.0833°E ஆகும்.
மேற்கோள்கள்
- Sir William Wilson Hunter. The imperial gazetteer of India, Volume 5. பக். 471.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.