குமார ராஜா
குமார ராஜா 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. கே. ராமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். பாலையா, எம். என். ராஜம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
குமார ராஜா | |
---|---|
இயக்கம் | ஜி. கே. ராமு |
தயாரிப்பு | கே. முனிரத்தினம் சிவகாமி பிக்சர்ஸ் |
இசை | டி. ஆர். பாப்பா |
நடிப்பு | டி. எஸ். பாலையா எம். என். ராஜம் |
வெளியீடு | ஏப்ரல் 21, 1961 |
நீளம் | 15824 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் டி. ஆர். பாப்பா. பாடலாசிரியர்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், அ. மருதகாசி, தஞ்சை ராமையாதாஸ், கே. டி. சந்தானம் ஆகியோர்.[2] பாடகர்: ஜே. பி. சந்திரபாபு. பின்னணி பாடியவர்கள்: வி. என். சுந்தரம், பி. லீலா, கே. ஜமுனாராணி, சூலமங்கலம் ராஜலட்சுமி, ஏ. ஜி. ரத்னமாலா ஆகியோர்.
எண் | பாடல் | பாடியவர்கள் | பாடலாசிரியர் | கால அளவு |
---|---|---|---|---|
1 | ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே | பி. லீலா | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 03:12 |
2 | கண்டாலே போதும், காதல் வந்து மோதும் | குழுவினருடன் கே.ஜமுனாராணி | ||
3 | மணமகளாக வரும் மங்கை எவளோ | வி. என். சுந்தரம் | 02:54 | |
4 | நான் வந்து சேர்ந்த இடம் நல்ல இடம் | பி. லீலா | 03:50 | |
5 | என்னைப் பார்த்த கண்ணு வேறு பெண்ணைப் பார்க்குமா | ஜே. பி. சந்திரபாபு & கே. ஜமுனாராணி | ||
6 | மூடினாலும் திறந்தாலும் | கே. டி. சந்தானம் | ||
7 | ஒண்ணுமே புரியலே உலகத்திலே | ஜே. பி. சந்திரபாபு | 03:20 | |
8 | ஆணுண்டு பாட, பெண்ணுண்டு ஆட | ஜே. பி. சந்திரபாபு & பி. லீலா | 03:00 | |
9 | அங்காடிக் கடை வீதியிலே | சூலமங்கலம் ராஜலட்சுமி & ஏ. ஜி. ரத்னமாலா | தஞ்சை இராமையா தாஸ் | |
10 | கண்ணழகி பாமா, என்முன்னே வாம்மா | கே. ஜமுனாராணி | அ. மருதகாசி |
மேற்கோள்கள்
- "Kumara Raja 1961". தி இந்து (3 மார்ச்சு 2012). மூல முகவரியிலிருந்து 20 ஆகஸ்டு 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 8 மார்ச்சு 2017.
- கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 20.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.