குன்றி

குன்றுமணி அல்லது குன்றிச் செடி (Jequirity) என்பது, ஆப்ரஸ் பிரிக்கட்டோரியஸ் (Abrus precatorius) என்னும் அறிவியற் பெயர் கொண்ட ஒரு கொடித் தாவரம் ஆகும். கடுமையான சிவப்பு நிறத்தில் கருமை நிறத்தில் ஒரு மறுவைக் கொண்ட கொண்ட இதன் விதை பொதுவாகக் குண்டுமணி என அறியப்படுகிறது. இச் சொல் குன்றிமணி என்பதன் திரிபு ஆகும். இதன் வேறு பெயர்கள்: குன்றி, குண்டு மணி, மனோசீலை, குன்று மணி, குன்றி வித்து. சிலர் நண்டின் கண்களுக்கு இதனை ஒப்பிடுவர். கவர்ச்சியான இந்த விதை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. எனினும் இதன் தோல் மிகவும் கடினமாக இருப்பதால், இதை முழுதாக விழுங்கினால் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.ஆனால் இவ் விதையை எரிப்பதனால் (நேரடியாகவே அல்லது வேறு ஏதேனும் பொருட்களுடன் ) ஏற்படும் புகைகை சுவாசிப்பதனால் நரம்பியல் சம்பந்தப்பட்ட சில நோய்களுக்கு காரணமாக உள்ளது.

குன்றி
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: மக்னோலியோபைட்டா
வகுப்பு: மக்னோலியோப்சிடா
வரிசை: ஃபேபேலெஸ்
குடும்பம்: பபேசியே
துணைக்குடும்பம்: ஃபேபோயிடே
சிற்றினம்: ஆப்ரியே
பேரினம்: ஆப்ரஸ்
இனம்: ஆ. பிரிகட்டோரியஸ்
இருசொற் பெயரீடு
ஆப்ரஸ் பிரிகட்டோரியஸ்
L

சில பகுதிகளில் இம் மணிகளை அணிவகைகள் செய்வதற்குப் பயன்படுத்துகின்றனர். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மரபு வழி நகைத்தொழில் செய்வோர் தங்கத்தின் நிறையை அளவிடுவதற்குக் குன்றிமணிகளைப் பயன்படுத்துவது உண்டு. சீனாவில் இவ்விதை காதலின் சின்னமாகக் கருதப்படுகிறது.

குன்றிமணியில் உள்ள நஞ்சு ஆப்ரின் (abrin) எனப்படுகிறது. இது ரைசின் (ricin) எனப்படும் நச்சுப் பொருளுக்கு நெருக்கமான உறவுடையது. இது இரு புரதத் துணை அலகுகளைக் கொண்ட ஒர் இருபடிச் சேர்மம் (dimer) ஆகும். இத் துணை அலகுகள் "எ", "பி" என அழைக்கப்படுகின்றன. "பி" சங்கிலி திசுள் (இலங்கை வழக்கு: கலம்) மென்சவ்வுகளில் இருக்கும் ஒருவகைக் காவிச் செல்லும் புரதங்களுடன் இணைந்து கொள்வதன் மூலம் ஆப்ரின் நஞ்சு திசுள்களுக்குள் செல்ல உதவுகிறது.

படங்கள்

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.