குத்தாயிசி

குத்தாயிசி அல்லது குத்தயீசி (ஆங்கிலம்: Kutaisi; சியோர்சியன்: ქუთაისი) மேற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பா ஆகிய கண்டங்களை இணைத்து அமைந்துள்ள நாடான சியார்சியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. தலைநகர் திபிலீசிக்கு (Tbilisi) அடுத்ததாக சியார்சியாவின் இரண்டாவது பெரிய நகரான "குத்தாயிசி" சட்டமன்ற தலைநகரமாகும்.[2] தலைநகர் திபிலீசியிலிருந்து மேற்கே 221 கிலோமீட்டர் (137 மைல்) அமைந்துள்ள "குத்தாயிசி" அந்நாட்டின் மேற்கு பிராந்திய தலைநகராக உள்ளது.[3]

Kutaisi
ქუთაისი

கொடி

சின்னம்
CountryGeorgia
Region (Mkhare)Imereti
அரசு
  MayorShota Murghulia [1]
பரப்பளவு
  மொத்தம்82
மக்கள்தொகை (2013)
  மொத்தம்200
நேர வலயம்Georgian Time (ஒசநே+4)
ClimateCfa
இணையதளம்kutaisi.gov.ge

புவியியல்

குத்தாயிசி மாநகரம் ரியோனி ஆற்றின் (Rioni River) இருகரையிலும் பகிர்ந்து அமைந்தவாறு உள்ளது.[4] இந்நகரம் கடல்மட்டத்திலிருந்து 125-300 மீட்டர் (410-984 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.[5] கிழக்கு மற்றும் வடகிழக்குவரையில் லமெரிடி(Imereti) மலைத்தொடர் அடிவாரத்தால் சூழப்பட்டுள்ளது, வடக்கு மற்றும் மேற்கு புலத்தில் சாம்குறலி (Samgurali) வீச்சையும் மேற்கு மற்றும் தெற்கில் கல்ச்சீஸ் (Colchis) சமவெளிப் பகுதியாக உள்ளது.[6]

நிலஎழில்

குத்தாயிசியின் வடகிழக்கு மற்றும் வடமேற்கு திசைகளில் இலையுதிர்க்கும் வனங்களினால் சூழப்பட்டுள்ளது,[7] நகரின் புறநகர்ப் பகுதிகளில் பரவலான வேளாண் நிலங்களாகக் காணப்படுகிறது. நகரின் மையப்பகுதிகளில் தோட்டங்கள் அமைத்து பராமரிப்பதோடு வீதிகளின் விளிம்புகளில் இருபுறமும் உயர்ந்த இலையடர் மரங்களின் வரிசையாக காணப்படுகின்றன. வசந்த காலத்தில் நகரின் பின்னணியில் உள்ள மலைப்பகுதியிலிருந்து பனியுருகி நகரின் மத்தியில் ஓடும் ரியோனி ஆற்றில் கலந்தோடுகிறது.

காலநிலை

குத்தாயிசியின் காலநிலை இலையுதிர் மற்றும் குளிர்கால மாதங்களில், ஈரப்பதமான, மிதமான வெப்பமண்டலக் காலநிலையாக, நன்கு வரையறுக்கப்பட்ட பருவப்பெயர்ச்சியாய் நடைபெறுகிறது (கோல்சிஸ் சமவெளி பண்பு) .[8] கோடைகாலம் பொதுவாக வெப்பமாகவும் ஒப்பிட்டளவில் உலர்ந்த தன்மை கொண்டதாகவும், குளிர்காலம் ஈரமானதாகவும் குளிரானதாகவும் உள்ளது. நகரத்தின் சராசரி ஆண்டு வெப்பநிலையானது 14.5 டிகிரி செல்சியஸ்யாகவும், சனவரி மாதம் மிகக் குளிரான மாதமாகச் சராசரியாக 5.3 டிகிரி செல்சியஸ் கொண்டுள்ளது. சூலை மாதங்களில் வெப்பநிலை சராசரியாக 23.2 டிகிரி செல்சியஸ்யாக உயர்ந்து வெப்பமான மாதமாகவும் உள்ளது.[9] மிக குறைந்த பட்சமாக அளவைப்பதிவு வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் மற்றும் அதிகபட்சப் பதிவு வெப்பநிலை 44 டிகிரி செல்சியசாக உள்ளது, இதன் சராசரி ஆண்டு வீழ்படிவு சுமார் 1,530 மிமீ (60.24) அளவையாகும்.[10] குத்தாயிசியின் பிராந்தியத்தில் ஒவ்வொரு ஆண்டின் பருவகாலங்களில் மழை பெய்கிறது. நகரத்தில் பெரும்பாலான காலங்களில் குளிர்ந்த தன்மையாக காணப்படுகிறது அதேவேளை பலத்த மற்றும் கடும் பனிப்பொழிவு ஏற்படுவதுண்டு. ( ஒரு பனிப்புயலுக்கு, 30 செமீ/12 அங்குலம் வரையிலுமான பனிப்பொழிவு இங்கு அசாதாரணமானதல்ல) ஆனால், பனிமூடல்கள் பொதுவாக ஒரு வாரத்திற்குமேல் நீடிப்பதில்லை. கோடையில், அருகிலுள்ள மலைகளிலிருந்து பலத்த கிழக்குக் காற்று குத்தாயிசியில் வீசுகிறது.[11]

தட்பவெப்ப நிலைத் தகவல், குத்தாயிசி
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 9.4
(49)
10.6
(51)
13.3
(56)
18.3
(65)
23.9
(75)
26.1
(79)
27.8
(82)
28.3
(83)
25.6
(78)
22.2
(72)
17.8
(64)
12.2
(54)
19.63
(67.3)
தாழ் சராசரி °C (°F) 3.9
(39)
3.9
(39)
5.6
(42)
9.4
(49)
13.9
(57)
16.7
(62)
18.9
(66)
18.9
(66)
16.1
(61)
12.8
(55)
10.6
(51)
6.7
(44)
11.44
(52.6)
பொழிவு mm (inches) 145
(5.7)
104
(4.1)
86
(3.4)
84
(3.3)
84
(3.3)
112
(4.4)
99
(3.9)
91
(3.6)
122
(4.8)
102
(4)
81
(3.2)
183
(7.2)
1,293
(50.9)
ஆதாரம்: Weatherbase [12]

வரலாறு

குத்தாயிசி 1870ல்

குத்தாயிசி, பண்டைய கோல்சிஸ் பண்டைய இராச்சியத்தின் தலைநகரமாகும். இந்நகரம் கிமு இரண்டாவது புத்தாயிரத்தில் கோல்சிஸ் தலைநகராக செயல்பட்டு வந்துள்ளதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன.[13] ஜெசன் மற்றும் அர்க்கோனாட்சின் கோல்சிசின் பயணம் குறித்து அப்பலோனியஸ் ரோடியசால் எழுதப்பட்ட கிரேக்கக் கவிதையான ’அர்கோனட்டிக்கா’வில் அவர்கள் பயணத்தின் இறுதி இலக்காகவும் ஏட்ஸ் (Aeëtes) அரசர் தங்கியிருந்த இடமாகவும் குத்தாயிசி இருந்ததாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளதாகப் சில வரலாற்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.[14][15]

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.