குதிரைப்படை

குதிரைப்படை பண்டைய காலத்திலிருந்து 20ம் நூற்றாண்டு வரை பன்னாட்டுப் படைகளில் இடம்பெற்ற படைப்பிரிவுகளில் ஒன்று. படை வீரர் குதிரை மீது அமர்ந்து வேகமாக நகர்ந்து போர் செய்த படை குதிரைப் படை ஆகும். தற்காலத்தில் வெகு சில இடங்களில் மட்டுமே படைப்பிரிவாகப் பயன்படுகிறது. பல நகரங்களின் காவல் படைகளிலும் குதிரைப்படைகள் இடம் பெற்றுள்ளன.

அரசர்கள் காலத்தில் விரைவாக பயணம் செய்ய ஏற்ற வகையில் குதிரைப்படை இருந்தது. குதிரைகளுக்கு கவச உடை அணிவித்திருந்தார்கள். வீரர்கள் குதிரையில் அமர்ந்து கொண்டே சண்டையிட்டனர். படை வீரர் வில், ஈட்டி, வாள் போன்ற ஆயுதங்களை குதிரை மீது இருந்து பிரயோகித்தனர். வேக நகர்வு பல்வேறு போர் வியூகங்களுக்கு வழிவகுத்தது. குதிரைகள் கவசமிட்டு காக்கப்பட்டன. தரைப்படை வீரர்களை குதிரையில் இருந்தும் தாக்கும் முறையும் கையாளப்பட்டது. குதிரை வீரர்களில் ஒரு பிரிவினர் வில்- அம்பை ஆயுதமாகவும், மற்றொரு பிரிவினர் வாட்களை ஆயுதமாகவும் பயன்படுத்தினர்.

அரசர்கள் காலத்தில் யானைப் படையுடன், குதிரைப்படையும் இருந்தது. அலெக்சாந்தர் போன்ற மாவீரர்கள் பல நாடுகளை கைப்பற்ற இந்த குதிரைப்படைகள் தான் உதவின. உணவு கிடைக்காத காலத்தில் வீரர்கள் குதிரையை சமைத்து உண்ணும் பழக்கத்தினை வைத்திருந்தார்கள்.

உசாத்துணைகள்

  • ந. சி. கந்தையா பிள்ளை. (2006). தமிழர் பண்பாடு. அப்பர் அச்சகம்: சென்னை.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.