புரவியெடுப்பு

புரவியெடுப்பு அல்லது குதிரையெடுப்பு என்பது நாட்டுபுறத் திருவிழாக்களுள் ஒன்றாகும். புரவி என்பதற்கு குதிரை என்பது பொருளாகும். மண்ணால் செய்த குதிரைகளை அலங்கரித்து வழிபாடு செய்யும் முறைக்கு புரவியெடுப்பு என்று பெயர். இவ்வகை வழிபாடு பெரும்பாலும் தென்தமிழகப் பகுதிகளில் காணப்படுகிறது. ஐயனாரின் வாகனமாக விளங்கும் குதிரைகளுக்குச் செய்யும் மரியாதையாக இவ்விழா நிகழ்கிறது.

மண் புரவி
புரவி

இதனை உருவாரம் எடுத்தல் எனவும் வழங்குவர். படத்தில் காண்பது போன்ற குதிரை உருவங்களையும், தாத்தா, பாட்டி உருவங்களையும் தலையில் சுமந்து சென்று கோயில்களில் வைப்பர். "உனக்கு உருவாரம் எடுக்கிறேன். என் துன்பத்தைப் தீர்த்து வை" எனத் தெய்வத்தின்மீது சார்த்தி உறுதிமொழி எடுத்துக்கொளவர். இன்னல் தீர்ந்ததும் தெய்வம் தீர்த்துவைத்ததாக நம்பி உருவாரம் எடுப்பர்.

கலைஞனுக்குச் சிறப்பு செய்தல்

இந்த உருவாரங்கள் அய்யனார், மாரியம்மன், செல்லியம்மன் முதலான நாட்டுப்புறக் கோயில்களில் வைக்கப்பட்டிப்பதைக் காணமுடிகிறது. திருவிழாவின்போது உருவாரம் செய்த கலைஞன் (குயவன்) மேளதாளத்துடன் சென்று ஊர்மக்களால் அழைத்துவரப்படுவான். அவனது வீட்டிலேயே அவனுக்குச் சிறப்பு செயப்படும். அவனைக் கோயிலுக்கு அழைத்துவந்த பின்னர், உருவாரம் கொண்டுவருவோரின் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று கொட்டுமுழக்குடன் அனைவரையும் ஒன்றாகத் திரட்டிக்கொண்டு வந்து உருவாரங்கள் அனைத்தையும் கோயிலில் இறக்கி வழிபாடு நடத்துவர்.

ஒளிப்படத்தொகுப்பு


மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.