குடும்ப வன்முறை

குடும்ப வன்முறை எனப்படுவது ஒரு குடும்ப உறுப்பினர் இன்னுமொரு குடும்ப உறுப்பினர் மீது செலுத்தும் உடல் அல்லது உளவியல் வன்முறை ஆகும். இது கணவன், மனைவி அல்லது மனைவி, கணவன் மீது செலுத்தும் வன்முறையைப் பொதுவாக சுட்டி நிற்கின்றது. துணையைத் துன்புறுத்தல் பல வடிவங்களில் வெளிப்படலாம். அடித்தல், பயமுறுத்தல், பாலியல் வற்புறுத்தல், உளவியல் முறையில் வற்புறுத்தல், திருமண முறிவு என்று பயமுறுத்தல், குடும்பத்தை விட்டு வெளியேறி விடுவேன் என்று பயமுறுத்துதல் என்று பல வழிகளில் இது வெளிப்படலாம்.

தமிழ்ச் சூழலில் குடும்ப வன்முறை

இந்தியாவில் 70 சதவீத பெண்கள் குடும்ப வன்முறையால் துன்புறுத்தப்படுகின்றனர்.[1] ஆண் ஆதிக்க மரபுடைய தமிழ்க் குடும்ப கட்டமைப்பில் பெரும்பாலும் ஆண்களே பெண்களை குடும்ப வன்முறைக்கு உட்படுத்துகின்றனர்.

மேற்கோள்கள்

  1. குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம் 2005

குடும்ப வன்முறை

முன்னுரை

   குடும்ப வன்முறையின் மூலம் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பெண்களுக்கு சிலச்சில உரிமைகளை மட்டும் அளித்துவிட்டு குடும்பத்தில் பங்கெடுக்கும் மற்றும் சுயநிலையை உரிமை மறுக்கப்பட்டு உரிமை மீறல்களும் இழக்கப்படுகின்றன.

குடும்ப வன்முறையில் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படும் முறைகளாக பெண்கள் மனித உரிமை ஆணையம் கூறியவை - 1) மாமியார் கொடுமைகள் 2) கணவனின் உறவினர்களால் ஏற்படுத்தப்படும் உரிமை மீறல்கள் 3) கணவனால் மறுக்கப்படும் உரிமைகள் 4) அடிப்படை உரிமைகளான கல்வி கற்கும் உரிமை 5) சுதந்திர உரிமை 6) பெண் சிசுக் கொலைகள் 7) வரதட்சணை கொடுமை 8) பெண் கருக்கொலைகள் 9) மனைவியை அடித்துத் துண்புறுத்தல் 10) விதவைகள் கொடுமைகள் 11) குழந்தை மனித உரிமை மீறல் 12) கொலைகள் புரிதல் 13) எரித்தல் ... போன்றவை

குடும்ப வண்றை நடைபெறும் விதங்கள்

   1) பெற்றோர்களால் குழந்தைகள் கொல்லப்படுதல் 
   2) வீட்டு வேலையாட்களை உரிமையாளரே கொல்லுதல் 
   3) வீட்டு வேலையாட்கள் வீட்டின் உரிமையாளரை கொல்லுதல் 
   4) கொள்ளை போன்ற செயல்களில் வீட்டு வேலையாட்கள் ஈடுபடுதல் 
   5) மாமனார் / மாமியார் கொடுமையினால் திருமணமான பெண்கள் கொலை செய்யப்படுதல் 
   6) சொத்துக்காக சகோதரரோ / சகோரிகளோ கொல்லப்படுதல்
   7) உடல் சார்ந்த வன்முறைகள் - சிறு காயங்கள் / பெருங்காயங்கள் ஏற்படுத்துதல் 
   8) பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் / சித்திரவதை செய்தல் 
   9) உளவியல் மூலம் / வார்த்தையின் மூலம் அவமதித்தல் 
  10) பொருளாதார ரீதியாக பயமுறத்துதல் 
  11) வீட்டுக் காவலில் வைத்தல்

குடும்ப வன்முறையைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைள்

1) பெண்களின் மீதான வன்முறையைத் தடுக்க மகளிர் காவல்நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2) பெண்களுக்கெதிரான குற்றங்களை செயல்படுத்துவோருக்கு கடினமான தண்டனைகளை வழங்குதல் 3) பெண்களுக்கான மனித உரிமை பிரிவுகளை ஏற்படுத்தல் 4) வரதட்சணையை ஒழிக்க வரதட்சனை தடுப்புச்சட்டம் எற்படுத்தல் 5) பெண்களுக்கெதிரான வன்முறை புகுந்தவீட்டில் நடந்தால் சட்டப்பிரிவு 498ஏ பிரிவின் கீழ் 3 ஆண்டிற்கு கடுங்காவல் தண்டனை / அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படும். 6) பெண்கள் நலவாரியம் ஏற்படுத்தப்பட்டமை 7) குடும்ப வன்முறையினால் ஏற்படுத்தப்படும் குற்றங்களை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 375, 372, 379, 498ஏ, 376ஏ, 302பி, 306, 398ஏ, 307 மற்றும் 309 பரிவுகளின் கீழ் குற்றங்களையும் தண்டனையையும் விதிக்க வழிமுறைகளை உருவாக்கியுள்ளது. 8) முறையற்ற மனித உரிமை அத்துமீறல் சட்டம் 9) தொழிலாளர் நலம் காணுவதற்கான சட்டம் - ஆகியன.

Reference 1) Indian Constitution 2) ‘மனித உரிமைகள் கல்வி’ பியுலா ரெய்னிஸ்கி ஜெபா தினகரன் - ஸ்ரீ கிருஷ்ணா பப்ளிகேஷன்ஸ், சென்னை 2011

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.