குடமலை
சங்க இலக்கியங்களில் வரும் சொல்லாட்சிகள் குடமலை என்பது வடக்கில் காவிரி தோன்றும் பகுதிமுதல் தெற்கில் சந்தனம் மணக்கும் பொதியமலை வரை உள்ள மேற்குத்தொடர்ச்சிமலை முழுவதையும் குறிக்கும் என்பதைப் புலப்படுத்துகின்றன.
குடமலையில் பிறந்த ஆரம் (சந்தனம்) அகில் கட்டைகள் கடல் வழியே ஏற்றுமதி செய்வதற்காகப் புகார்த் துறைமுகத்தில் குவிந்துகிடந்தன.[1] காவிரி தோன்றுமிடம் குடமலை. [2] குணகடல் தோன்றிய கதிரவன் குடமலையில் மறையும் [3] காவிரி குடமலை பிறந்த கொழும் பஃறாரமொடு (பல தரும் வொருள்களோடு) பாயும் [4], குடமலை மாங்காட்டு உள்ளேன் என மாங்காட்டு மறையவன் தன்னைக் கூறிக்கொள்கிறான் [5]சிலப்பதிகாரத்தில் பாலைநிலத்து வேட்டுவர் விழாக் கொண்டாடும்போது சாலினி என்னும் குறிக்காரி தெய்வம் ஏறிக் குறி சொல்லும்போது கண்ணகியை “இவளோ கொங்கச்செல்வி, குடமலையாட்டி” எனக் கூறுகிறாள் (குடமலை வென்வேலான் குன்றில் மறைந்தாள்)[6]
அடிக்குறிப்பு
- பட்டினப்பாலை 188
- குடமலைப் பிறந்த தண்பெருங் காவிரி மலைபடுகடாம் 527
- நற்றிணை 215, நற்றிணை 239
- சிலப்பதிகாரம் 10-106
- சிலப்பதிகாரம் 11-53,
- சிலப்பதிகாரம் 12-1-47