குச்லுக்

குச்லுக் என்பவர் மேற்கு மங்கோலியாவின் நைமர்கள் இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் காரா கிதை பேரரசின் கடைசி ஆட்சியாளர் ஆவார். செங்கிஸ் கானால் நைமர்கள் தோற்கடிக்கப்பட்ட போது குச்லுக் மேற்கு நோக்கி காரா கிதைக்கு ஓடினார். அங்கு இவர் ஒரு ஆலோசகராகப் பணியாற்றினார். பின்னர் கலகம் செய்து அரியணை ஏறி காரா கிதையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். 1218ல் மங்கோலியர்களால் கொல்லப்பட்டார். காரா கிதை வளர்ந்து வந்த மங்கோலியப் பேரரசில் இணைக்கப்பட்டது.

குச்லுக்
屈出律
காரா கிதையின் குர்கான்
1213–1218
முன்னையவர் யெலு ஜிலுகு
பின்னையவர் மங்கோலியர்களின் காரா கிதை படையெடுப்பு
நைமர்களின் கான்
ஆட்சிக்காலம் 1204 - 1218
முன்னையவர் டைபுகா மற்றும் புய்ருக் கான்
பின்னையவர் மங்கோலியர்களின் காரா கிதை படையெடுப்பு
வாழ்க்கைத் துணை இளவரசி ஹுன்ஹு (渾忽公主)
வாரிசு
லின்ஜ்குன் கதுன்
ஊழிப் நாட்கள்
டியான்க்ஷி (天禧 டியான்க்ஷி) 1178–1218
தந்தை டைபுகா
இறப்பு 1218
சமயம் நெசுத்தோரியக் கிறித்தவம், பிறகு பௌத்தம்

உசாத்துணை

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.