கீலுங் ஆறு
கீலுங் ஆறு (சீனம்: 基隆河; பின்யின்: Jīlóng Hé; வேட்-கில்சு: Chi1-lung2 Ho2) வட தாய்வானில் அமைந்துள்ள ஓர் ஆறாகும். பிங்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஜிங்டொங் நகரில் வடமேற்குப் பகுதியில் உள்ள மலைகளில் இருந்து இவ்வாறு ஊற்றெடுக்கின்றது. இது பின்பு ரிஃப்ட் கணவாயில் விழுகின்றது. இறுதியில் இது தம்சுயு ஆற்றுடன் கலக்கின்றது.
கீலுங் ஆறு Keelung River 基隆河 | |
---|---|
![]() | |
மூலம் | ஹுஓ ஷோ லையோ மலை (Huo Shou Liao Mountain - 火燒寮山) |
வாய் | தம்சுயு ஆறு |
நீரேந்துப் பகுதி நாடுகள் | ![]() |
நீளம் | 96 கிமீ |
தொடக்க உயரம் | 560 மீ |
வாய் உயரம் | ?? m |
வெளியேற்றம் | ?? மீ³/s |
நீரேந்துப் பகுதி | 493 கிமீ² |

அமைவிட வரைபடம்
மாசடைவு
கழிவுப் பொருட்கள், தொழில்துறை மாசு (சட்டவிரோதமான) என்பவற்றால் இது மாசுபடுத்தப்படுகின்றது.[1]
நிகழ்வுகள்
பெப்ரவரி 04, 2015 அன்று டிரான்சுஆசியா ஏர்வேசு பறப்பு 235 இவ்வாற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.[2]
மேற்கோள்கள்
- Taipei from the River - Marco Casagrande, E-Architect March, 2011
- CNN, Multiple fatalities after TransAsia flight hits Taipei bridge, crashes into river, Euan McKirdy, Wednesday 4 February 2015
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.