கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரகோவனார்

சேரகோவனார் சங்ககாலப் புலவரில் ஒருவர். இவர் கிள்ளிமங்கலம் கிழார் என்னும் புலவரின் மகன் ஆவார். சேர கோவனாரின் பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 365 எண் கொண்ட பாடலாக உள்ளது.

'கோன்' என்னும் சொல் அரசனை உணர்த்துவது போலக் 'கோவன்' என்னும் சொல்லும் அரசனை உணர்த்தும். இவன் சேர அரசன் எனத் தெரியவருகிறது.

நற்றிணை 365 பாடல் சொல்லும் செய்தி

தலைவன் தலைவியை நாடிவந்து காத்திருக்கிறான். களவு போதும், கற்பு வாழ்க்கை அமையட்டும் என வற்புறுத்த விரும்பும் தோழி தலைவிக்குச் சொல்வது போலத் தலைவனுக்கு உறைக்கும்படி அவனது இயல்பைப் பழித்துக் கூறுகிறாள்.

தாயின் கட்டுக்காவலை மீறக்கூடாது. நாம் மீறிச் செல்வோம். (ஊரின் எல்லையைப் பெருங்கடை என்பர்) பெருங்கடையை மகளிர் துணையின்றித் தாண்டக்கூடாது. நாம் தாண்டிச் செல்வோம். வெளியூர் மன்றங்களுக்குப் போகக்கூடாது. நாம் பட்டப் பகலிலேயே போவோம். அவரின் ஊர்மன்னறத்தில் அவர் அறம் இல்லாதவர் என்பதைச் சொல்லிவிட்டு வந்துவிடலாம் என்கிறாள் தோழி.

மழை பெய்யாவிட்டாலும் ஊற்று நீர் ஓடும் அறம் கொண்டது அவர் நாடு. ஆனால் அவரிடம் அறம் இல்லை. அவர் ஊருக்கே சென்று நீர் அறம் இல்லாதவர் என்று சொல்லிவிட்டு வந்துவிடலாம். போய்வரலாமா தோழி! என்கிறாள் தோழி.

பழந்தமிழ்

  • அயம் = ஊற்று நீர்
  • நீவி = நீங்கி, எல்லையைத் தாண்டி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.