கில்லியன் மேர்பி

கில்லியன் மர்பி (Cillian Murphy, பிறப்பு: 25 மே 1976) அயர்லாந்தைச் சேர்ந்த திரைப்பட நடிகராவார்.[1] இவர் ஒரு ராக் பாடகராகத் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தார். 1990களின் பிற்பகுதியில் சிறு படங்களில் நடித்து நடிகராக அறிமுகமானார். கிறிஸ்டோபர் நோலனின் பேட்மேன் பிகின்ஸ், டன்கிர்க் மற்றும் இன்செப்சன் போன்ற பிரபல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கில்லியன் மர்பி
பீக்கி பிளைன்டேர்ஸ் தொலைக்காட்சித் தொடரின் தொடக்க நிகழ்வில் 2014 இல் கில்லியன் மேர்பி
பிறப்பு25 மே 1976 (1976-05-25)
டக்லசு, கோர்க், அயர்லாந்து
தேசியம்ஐரிசு
படித்த கல்வி நிறுவனங்கள்பிரசென்டேசன் பிரதர்ஸ் கல்லூரி, கோர்க்
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1996–நடப்பு
வாழ்க்கைத்
துணை
யுவொன் மக்கினசு (தி. 2004)
பிள்ளைகள்2

'28 டேய்ஸ் லேற்றர்' (2002), 'கோல்ட் மௌண்டன்' (2003), 'இன்ரெர்மிசன்' (2003), 'ரெட் ஐ' (2005) போன்ற திரைப்படங்களில் நடித்த பின்னரே மேர்பி புகழடைந்தார். 2005 இல் நடித்த 'பிறேக்பாஸ்ற் ஒன் புளூட்டோ திரைப்படத்திற்காக, இசை அல்லது நகைச்சுவை திரைப்படங்களின் சிறந்த நடிகர் பிரிவில் கோல்டன் குளோப் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.[2]

பிறப்பு மற்றும் இளமைக் காலம்

கிளியன் மர்பி 25 மே, 1976 இல் அயர்லாந்தில் உள்ள டக்லஸ் என்னும் ஊரில் பிறந்தார். இவரின் தந்தை அயர்லாந்து கல்வித்துறையில் பணியாற்றியவர், தாய் பிரெஞ்சு மொழி ஆசிரியர். இவருக்கு ஒரு இளைய சகோதரர், மற்றும் இரண்டு இளைய சகோதரிகள் உள்ளனர். மர்பி தனது பத்தாவது வயதில் இசையமைக்கவும், பாடல்கள் எழுதவும் ஆரம்பித்தார். மர்பியின் குடும்பம் ரோமன் கத்தோலிக்கக் கிறுத்துவ மதப்பிரிவைச் சார்ந்தவர்கள். தனது இருபதாவது வயதில் சகோதரருடன் சேர்ந்து பல இசைக் குழுக்களில் பாடல்கள் பாடிக் கொண்டும், இசையமைத்துக் கொண்டும் தனது கலைப் பயணத்தைத் தொடர்ந்தார். கல்லூரியில் இருந்த நாடகக் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டு நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். பிறகு படிப்பின் மீது ஆர்வமின்மையால் கல்லூரிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டார்.

நடிப்பு வாழ்க்கைப் பணி

1996-2001

மர்பி 1996 ஆம் ஆண்டு அயர்லாந்து இயக்குநர் என்ட வால்ஸின் திரைப்படமான டிஸ்கோ பிக்ஸ் இல் நடிகராக அறிமுகமானார். முதல் திரைப்படத்திற்குப் பிறகு இசையை கைவிட்டுவிட்டு நடிப்புத் துறையில் கவனம் செலுத்தத் தொடங்கினார். சேக்ஸ்பியரின் மச் அடு அபொட் நத்திங் (1998), தி கன்ட்ரி பாய் (1999) மற்றும் ஜூனோ அன்ட் தி பேகாக் (1999) ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இந்தத் திரைப்படங்களின் மூலம் நடிப்புத் திறமையை மர்பி வளர்த்துக் கொண்டார்.

பிறகு மர்பி சுதந்திரத் தயாரிப்பு நிறுவனங்கள் உருவாக்கும் முழுநீளத் திரைப்படங்களான தி மாஸ்க் (1999) ஆன் தி எட்ஜ் (2001) போன்றவற்றில் நடித்தார். குறும்படங்கள், பிபிசியின் தி வே வி லிவ் நவ்' ஆகிய குறுந் தொடர்களிலும் நடித்தார்.

இந்தக் காலகட்டத்தில் மர்பி அயர்லாந்தின் கார்க் நகரத்திலிருந்து டப்ளினிற்கு குடிப்பெயர்ந்தார், பின்பு 2001 இல் லண்டன் சென்றார்.

2002 - 2004

2002 ஆம் ஆண்டு மர்பிதி சேப் ஆப் திங்ஸ் எனும் திரைப்படத்தில் ஆதாம் எனும் கதாபாத்திரத்தில் நடித்தார். மர்பிக்கு உலகம் முழுவதுமிருந்து வெற்றித் தேடித் தந்த திரைப்படம் டேனி போய்லேஸின் திகில் திரைப்படமான 28 டேஸ் லேட்டர் ஆகும். வட அமெரிக்காவில் இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியது. இத் திரைப்படத்திற்காக மர்பி சோனி எரிக்சனின் 8 ஆவது பேரரசு விருது மற்றும் 2004 ஆம் ஆண்டு6 எம் டிவியின் சிறந்த ஆண் நடிகருக்கான திரைப்பட விருதையும் வாங்கினார். 2003 இல் தி சீகுல் எனும் படத்தில் நடித்தார், அதன் பின் அதே ஆண்டு இன்டர்மிசன் எனும் திரைப்படத்தில் நடித்தார். இது அயர்லாந்தில் அதிகப்படியான வசூலை வாரிய திரைப்படம் என்ற புதிய வரலாற்று சாதனையைப் படைத்தது(இச்சாதனை 2006 ஆம் ஆண்டு முறியடிக்கப்பட்டது).

இந்தக் காலகட்டத்தில் மர்பி அயர்லாந்து திரைப்பட நடிகராக இருந்து ஆங்கிலத் திரைப்பட நடிகரானார்.

2005 - 2006

மர்பி, டாக்டர் ஜோனாத்தன் கிரேன் எனும் கதாபாத்திரத்தில் உலகப் புகழ்பெற்ற இயக்குநரான கிரிஸ்டோபர் நோலனின் பேட்மேன் பிகின்ஸ் (2005) படத்தில் நடித்தார். மர்பி முதலில் பேட்மேன் பிகின்ஸ் திரைப்படத்தின் வௌவால் மனிதன்(Batman) கதாப்பாத்திரத்திற்கான நடிகர் தேர்வுக்குச் சென்றிருந்தார். நோலன் வௌவால் மனிதன் கதாப்பாத்திரத்திற்கு வேறு ஒருவரைத் தேர்வு செய்திருந்தாலும் மர்பியைப் பிடித்திருந்ததால் துணைக் கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்தார்.2006 ஆம் ஆண்டு எம் டிவியின் சிறந்த ஆண் வில்லனுக்கான திரைப்பட விருதை இப்படத்திற்காக மர்பி வாங்கினார். 2005 இல் மேலும் ஒரு வெற்றித் திரைப்படமான ரெட் ஐ இல் நடித்தார். இத்திரைப்படம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.