கிளாரா ஜெட்கின்

கிளாரா ஜெட்கின் (ஆங்கிலம்:Clara Zetkin) (பிறப்பு 5 ஜுலை 1857 &; இறப்பு 20 ஜு 1933) ஜெர்மனியைச் சேர்ந்த மார்க்சிய தத்துவவாதி. பெண்களுக்கான உரிமைகளை கேட்டுப் போராடிய செயற்பாட்டாளர். 1911 இல் சர்வதேச பெண்கள் தினத்திற்கு‍ பெண்களைத் திரட்டினார்.[1] 1917 ஆம் ஆண்டு‍ வரை ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி இன் உறுப்பினர். பின்னர் ஜெர்மனி சுதந்திர சமூக ஜனநாயக கட்சியின் உறுப்பினராகவும், ஸ்பார்ட்டாசிஸ் லீக்கின் உறுப்பினராகவும் இருந்தார். ஸ்பார்ட்டாசிஸ் லீக் பின்னர் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (KPD) ஆக மாறியது.[2]

கிழக்கு‍ ஜெர்மனி வெளியிட்ட வங்கி ரூபாய்
1910 இல் ரோச லக்சம்பர்க் உடன் கிளாரா

வாழ்க்கை மற்றும் பணி

கிளாரா ஜெட்கின் சாக்சோனியில் கிளாரா எய்சனர் என்ற விவசாய கிராமத்தில் பிறந்தவர்.[3] அவரது‍ தந்தை காட்பிரைடு‍ எய்சனர் ஒரு பள்ளி ஆசிரியர். அவரது தாயார், ஜோசபின் விட்டேல் எய்சனர். மிகவும் படித்த நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர் கிளாரா ஜெட்கின்.[3][4] இவரது‍ கணவர் பெயர் ஓசிப் ஜெட்கின்.[5] 1874 இல் ஜெர்மனியில் படிப்பை முடித்து ஆசிரியராக இருந்தபோது‍ பெண்கள் இயக்கம் மற்றும் தொழிலாளர் இயக்கங்களிலும் தொடர்பை வளர்த்துக் கொண்டார். பெர்டினன்‌டு‍ லஸ்சாலேயால் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து‍ ஜெர்மன் தொழிலாளர் சங்கம் மற்றும் ஆகஸ்டு‍ பெபெல் மற்றும் வில்கெல்ம் லீப்நெக்ட் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட ஜெர்மன் சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி ஆகிய இரண்டும் இணைத்து‍ ஒரு‍ கட்சியாக ஜெர்மன் சோசலிசத் தொழிலாளர் கட்சியாக உருவாக்கப்பட்டது. இந்த ஜெர்மன் சோசலிசத் தொழிலாளர் கட்சியில் 1878 இல் கிளாரா ஜெட்கின் சேர்ந்தார். 1890 இல் ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி பெயர் மாற்றப்பட்டது.

சர்வதேச மகளிர் தினம் தோற்றம்

ரோசா லக்சம்பர்க்கின் நெருங்கிய தோழி ஆவார். பெண்களுக்கான சம உரிமைகளுக்கு‍ கிளாரா ஜெட்கினுக்கு‍ போராடுவதில் அதிக ஈடுபாடும் ஆர்வமும் கொண்டவர். 1907 ஜெர்மனியில், ஸ்டட்கார்ட் என்ற நகரில் முதன் முதலாக ‘சோசலிச பெண்கள் மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதுமுள்ள பெண்கள் அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கு ஒரு சர்வதேச பெண்கள் அமைப்பு இம்மாநாட்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு கிளாரா ஜெட்கின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 1907 இல் புதிதாகத் உருவாக்கப்பட்ட ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதன் முதலில் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8, 1910 இல் ஆரம்பித்தார். இது‍ கோபன்கேகனில் நடைபெற்ற பெண்களுக்கான மாநாட்டில் இது‍ தீர்மானிக்கப்பட்டது. 1915 இல் பெர்லினில் சர்வதேச சோசலிச பெண்கள் அமைப்பின் போர் எதிர்ப்பு மாநாட்டை ஏற்பாடு‍ செய்தார்.[6]

ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில்

ஜெர்மனி புரட்சிக்குப் பின் 1919 ஜனவரியில் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. கிளாரா ஜெட்கினும் 1920 முதல் 1933 வரை அதில் தன்னை உறுப்பினராக சேர்த்துக் கொண்டார். 1920 இல் கிளாரா பெண்களைப் பற்றி லெனினிடம் நேர்காணல் ஒன்றை நடத்தினார்.[7] 1924 வரை ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். 1927 முதல் 1929 வரை அதன் மத்தியக்குழு உறுப்பினராகவும் இருந்தார். மேலும் அவர் 1921 முதல் 1933 வரை கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழு‍ உறுப்பினராகவும் இருந்தார்.

இறப்பு

1933 இல் இட்லர் ஆட்சிக்கு‍ வந்த பின் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அப்போது‍ கிளாரா சோவியத் யூனியனுக்கு‍ சென்றார். 1933 இல் கிளாரா ஜெட்கின் மாஸ்கோவிற்கு‍ அருகில் தனது‍ 76 ஆவது‍ வயதில் இறந்தார்.

ஆதாரங்கள்

  1. A woman's place is in the revolution
  2. http://www.britannica.com/EBchecked/topic/656735/Clara-Zetkin
  3. Young, James D. (1988). Socialism since 1889: a biographical history. Rowman & Littlefield. பக். 169. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-389-20813-2.
  4. Encyclopedia of World Biography: Vitoria-Zworykin. Gale Research. 1998. பக். 504. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7876-2556-6.
  5. Zetkin, Klara; Philip Sheldon Foner (1984). Clara Zetkin, selected writings. International Publishers. பக். 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7178-0620-0.
  6. [Lauren] (8 மார்ச் 2012). "International Women's Day: Who was Clara Zetkin?". தி கார்டியன். மூல முகவரியிலிருந்து 8 மார்ச் 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் டிசம்பர் 23, 2013.
  7. இதன் ஆங்கில மொழியாக்கம் பெண்கள் விடுதலை: லெனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள், கிளாரா நேர்காணல்

மேலும் பார்க்க

  • கிளாரா ஜெட்கின்: தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புக்கள், கிளாரா ஜெட்கின், 1991 ISBN 0-7178-0611-1
  • கிளாரா ஜெட்கின் ஒரு‍ சோசலிஸ்ட் தோர்தி ரீட்சு‍, 1987 ISBN 0-7178-0649-9

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.