கில்லட்டின்
கில்லட்டின் அல்லது கில்லெட்டின் (guillotine) மாந்தரின் தலையை வெட்டிக் கொன்று மரண தண்டனை நிறைவேற்றப் பயன்படும் எந்திரம். இதில் ஒரு உயரமான செங்குத்தான சட்டத்தில் ஒரு கூர்மையான கத்தி தொங்கிக் கொண்டிருக்கும். அதன் அடியில் உள்ள பலகையில் தண்டனை விதிக்கப்பட்டவரைக் கட்டி வைப்பர். அவரது கழுத்து கத்தி முனைக்கு நேர் கீழே இருக்கும். கத்தியை அவிழ்த்து விட்டால் வேகாகக் கீழிறங்கி அவரது கழுத்தில் பாய்ந்து தலையை உடனே துண்டித்து விடும்.

பிரெஞ்சுப் புரட்சியின் போது பிரான்சில் கில்லட்டினின் பயன்பாடு பரவலானது. விரைவாக மரண தண்டனையை நிறைவேற்றும் எந்திரமொன்று தேவைப்பட்டதால் கில்லட்டின் வடிவமைக்கப்பட்டது. புரட்சிகர பிரான்சில் மரண தண்டனை வழிமுறைகளை சீர் திருத்தில் ஜோசப்-இக்னேஸ் கில்லட்டின் எனும் மருத்துவரின் பெயரால் இவ்வியந்திரங்கள் “கில்லட்டின்” என்று அழைக்கப்பட்டன. கில்லட்டின்கள் வெகுஜன நினைவிலும் பரவலர் ஊடகங்களிலும் பிரெஞ்சுப் புரட்சி, பயங்கர ஆட்சி போன்றவற்றுடன் பெரிதும் தொடர்பு படுத்தப்படுகின்றன எனினும் பிரான்சில் 1981 மரண தண்டனை ஒழிக்கப்படும் வரை பயன்படுத்தப்பட்டு வந்தன.