கிலென்டேல், கலிபோர்னியா
கிலென்டேல் நகரம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், இலாசு ஏஞ்சல்சு வட்டத்தில் அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி இந்த நகரத்தின் மக்கள் தொகை 200167 ஆகும். மக்கள் தொகை கணக்கில் கிலென்டேல் நகரம், ஏஞ்சல்சு வட்டத்தில் மூன்றாவது இடமும், கலிபோரினியா மாநில அளவில் 23 ஆவது இடமும் உள்ளது. இங்கு ஆர்மீனியர்கள் கணிசமான தொகையில் வாழ்ந்து வருகிறார்கள்.[1]
அமைவிடம்
கிலென்டேல், இலாசு ஏஞ்சல்சு நகரிலிருந்து வடக்கில் 8 மைல் தொலைவில் உள்ளது. மேலும் சான் பெர்னான்டோ பள்ளத்தாக்கிற்குத் தென் கிழக்கில் உள்ளது. இதன் மேற்கில் பர்பாங்கும் கிரிப்பிக் பார்க்கும் உள்ளன.
கல்வி வசதிகள்
பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பல கிலென்டேலில் இருக்கின்றன. [2]இங்கு கிலென்டேல் நியூஸ் பிரஸ் என்ற செய்தித் தாள் வெளிவருகிறது. மூசியம் ஆப் நியான் ஆர்ட் என்ற கட்டடம் உள்ளது. பல தங்கல் விடுதிகளும் உள்ளன.