கிறித்தோபர் இட்சன்சு

கிறித்தோபர் இட்சன்சு (Christopher Hitchens) என்பவர் ஐக்கிய இராச்சியத்தில் பிறந்த, அமெரிக்க எழுத்தாளர், ஊடகவியலாளர், இலக்கிய விமர்சகர். இவரது சமயத்தை நோக்கி, குறிப்பாக சமயத்தில் புனிதமாக கருதப்படுபவையை நோக்கிய விமர்சனங்களுக்காக இவர் பெரிதும் அறியப்படுகிறார். புதிய இறைமறுப்பு இயக்கத்தின் நான்கு குதிரைவீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். (மற்ற மூவர்: சாம் ஃகாரிசு, ரிச்சர்ட் டாக்கின்சு, டேனியல் டென்னட்)

கிறித்தோபர் இட்சன்சு

2007ல் ஹிட்சன்ஸ்
பிறப்பு கிரிஸ்டோபர் எரிக் ஹிட்சனஸ்
ஏப்ரல் 13, 1949 (1949-04-13)
போர்ட்ஸ்மவுத், இங்கிலாந்து, ஐக்கிய ராஜ்யம்
இறப்பு திசம்பர் 15, 2011(2011-12-15) (அகவை 62)
ஊஸ்டன், டெக்சாஸ், அமெரிக்கா
தொழில் எழுத்தாளர், பத்திரிக்கையாளர், அரசியல் நோக்கர்
நாடு ஐக்கிய இராச்சியம்
ஐக்கிய அமெரிக்கா

முன்னர் இடதுசாரி அரசியல் பார்வை கொண்ட இவர், சல்மான் ருஷ்டிக்கு எதிராக இரானிய இஸ்லாமிய முல்லாக்கள் ஃபத்வா விடப்பட்டபின்னர், இடதுசாரிகள் அதை ஆதரித்ததை எதிர்த்து இடதுசாரிப் பிரிவில் இருந்து விலகினார். இவர் 18 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் அன்னை தெரசாவை விமர்சித்து இவர் எழுதிய 'த மிஷனரி பொஷிசன்' (The Missionary Position) நூல், சமய நம்பிக்கையை விமர்சித்து இவர் எழுதிய 'காட் இஸ் நாட் கிரேட்' (God Is Not Great) என்ற நூல் ஆகியவை பெரும் சர்ச்சையை எழுப்பியவை ஆகும்.

தாக்கங்கள்

ஜார்ஜ் ஆர்வெல், தாமஸ் பெய்ன், தாமஸ் ஜெஃவ்வர்சன், கார்ல் மார்க்ஸ், ரிச்சர்ட் டாக்கின்ஸ், லியோன் ட்ராட்ஸ்கி

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.