கிரீட்

கிரீட் (Crete, கிரேக்க மொழி: Κρήτη) கிரேக்கத் தீவுகளில் பெரியதும் மிகுந்த மக்கள்தொகை கொண்டதுமான தீவு ஆகும். மேலும் நடுநிலக் கடலில் உள்ள தீவுகளில் ஐந்தாவது பெரியத் தீவாகவும் விளங்குகிறது. கிரீசின் பதின்மூன்று நிர்வாக வலயங்களில் ஒன்றாக விளங்குகிறது. கிரீசின் பண்பாட்டு பாரம்பர்யத்திலும் பொருளாதாரத்திலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. தன் அடையாளப் பண்பாட்டுக்கூறுகளாக கிரீட்டிய வழக்குமொழி, கவிதை மற்றும் இசை வடிவங்களைக் கொண்டுள்ளது. (கி.மு. 2700 – கி.மு. 1420 காலங்களில் ஐரோப்பாவில் முதல் அரண்மனைகளைக் கட்டிய, பழமையான உயர் பண்பாட்டு நாகரிகமான மினோவன் நாகரிகத்தின் மையமாக இருந்தது.[1]

கிரீட்
Περιφέρεια Κρήτης
கிரீசின் வலயங்கள்
கிரீட் தீவின் நாசா ஒளிப்படம்
நாடு கிரேக்க நாடு
தலைநகர்எரெக்கிளான்
கிரீசின் வலய அமைப்புகள்
அரசு
  வலய ஆளுனர்இசுடாவ்ரோசு ஆர்னவ்டாகிசு (பான்எலெனிக் சோசலிச இயக்கம்)
பரப்பளவு
  மொத்தம்8,336
உயர் புள்ளி2,456
மக்கள்தொகை (2011)
  மொத்தம்6,21,340
  அடர்த்தி75
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுGR-M
இணையதளம்www.crete-region.gr

மேற்கோள்கள்

  1. Ancient Crete Oxford Bibliographies Online: Classics

வெளிl இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.