கியூஷூ

கியூஷூ (九州—ஒன்பது மாகாணங்கள்) ஜப்பானின் நாலு மிகப்பெரிய தீவுகளில் ஒன்றாகும். 35,640 சதுக்க கிமீ பரப்பளவில் அமைந்த கியூஷூவில் 2006 கணக்கெடுப்பின் படி மொத்தத்தில் 13,231,995 மக்கள் வசிக்கின்றனர். இத்தீவு யப்பானின் மூன்றாவது பெரிய தீவாகும்.[1]

九州
கியூஷூ
ஜப்பானின் கியூஷூ தீவும் அத்தீவின் மாவட்டங்கள்
புவியியல்
அமைவிடம்கிழக்கு ஆசியா
தீவுக்கூட்டம்ஜப்பானியத் தீவுக்கூட்டம்
உயர்ந்த புள்ளிநக்கடாக்கே
நிர்வாகம்
ஜப்பான்
பகுதிகள்ஃபுக்குவோக்கா, ககோஷிமா, குமமோட்டோ, மியசாக்கி, நகசாக்கி, ஓயிட்டா, சகா
பெரிய குடியிருப்புஃபுக்குவோக்கா (மக். 1,400,000)
மக்கள்
மக்கள்தொகை13,231,995
இனக்குழுக்கள்ஜப்பானியர்கள்

2016 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி, கியூஷூ 12,970,479 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. மேலும் 36,782 சதுர கிலோமீட்டர் (14,202 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.[2]

புவியியல்

இத்தீவு மலைப்பாங்கானது. இங்கு யப்பானில் தொழிற்படும் எரிமலையான 1,591 மீட்டர் (5,220 அடி) உயரமுடைய மவுண்ட் அசோ அமைந்துள்ளது. மத்திய கியூஷூவில் கிழக்கு கரையிலும் மவுண்ட் அசோ சூழவும் ஏராளமான வெப்ப நீரூற்றுகள் காணப்படுகின்றன. ஆசிய கண்டத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த தீவு யப்பானின் ஹொன்சு தீவிலிருந்து கன்மோன் நீரிணைகளால் பிரிக்கப்படுகின்றது.[3]

கியூஷூ என்ற பெயர் சைகைடாவின் பண்டைய ஒன்பது மாகாணங்களாகிய சிகுசென், சிகுகோ, ஹிசென், ஹிகோ, புசென், பூங்கோ, ஹைகா, ஒசுமி மற்றும் சாட்சுமா என்பவற்றிலிருந்து தோன்றியது.[4] இன்றைய கியுஷு பிராந்தியம் ஏழு மாகாணங்களை உள்ளடக்கிய அரசியல் ரீதியாக வரையறுக்கப்பட்ட பிராந்தியமாகும்.

வடக்கு கியுஷு

  • ஃபுகுயோகா ப்ரிபெக்சர்
  • குமாமோட்டோ மாகாணம்
  • நாகசாகி மாகாணம்
  • ஒய்டா ப்ரிபெக்சர்
  • சாகா ப்ரிபெக்சர்

தெற்கு கியூஷு

  • ககோஷிமா மாகாணம்
  • மியாசாகி மாகாணம்
  • ஒகினாவா மாகாணம்

சனத்தொகை

கியூஷு யப்பானின் மக்கள் தொகையில் 10.3 சதவீதத்தை கொண்டுள்ளது.[5] கியூஷுவின் வடமேற்கில் புகுயோகா மற்றும் கிடாக்கியுஷு ஆகிய நகரங்களில் பெரும்பான்மையான மக்கள் வாழ்கின்றனர். மேலும் தென்மேற்கே சசெபோ, நாகசாகி, தெற்கே குமாமோட்டோ மற்றும் ககோஷிமா பரவலாக வாழ்கின்றனர். கிழக்கு கடலோரத்தில் ஓய்டா மற்றும் மியாசாகி ஆகிய நகரங்களைத் தவிர்த்து ஏனைய இடங்களில் மக்கள் தொகையில் பொதுவான சரிவைக் காட்டுகிறது. கியூஷுவில் பலமான கட்சியாக முற்போக்கு சனநாயக கட்சி காணப்படுகிறது.[6]  

பொருளாதாரம்

குறிப்பாக மியாசாகி மாகாணம், ககோசிமா மாகாணம் உட்பட கியுஷுவின் பகுதிகள் துணை வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளன. இங்கு முக்கிய விவசாயப் பொருட்களான அரிசி, தேயிலை, புகையிலை, வற்றாளை, மற்றும் சோயா என்பவற்றுடன் பட்டும் பரவலாக உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தீவு அரிட்டா, இமாரி, சாட்சுமா, கராட்சு உள்ளிட்ட பல்வேறுபட்ட பீங்கான் உற்பத்திக்கு பெயர் பெற்றது. வடக்கில் ஃபுகுயோகா, கிடாக்கியுஷு, நாகசாகி மற்றும் ஓய்டாவைச் சூழவுள்ள பகுதிகளில் கனரக தொழில், வாகனங்கள், ரசாயனங்களின் உற்பத்தி, குறைக்கடத்திகள் உற்பத்தி மற்றும் உலோக பதப்படுத்தல் ஆகிய தொழில்துறை நடவடிக்கைகள் நடைப்பெறுகின்றன.

கியூஷுவில் நாட்டின் ஏனைய பிராந்தியங்களுடன் ஒப்பிடுகையில் 2010 ஆம் ஆண்டில் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு மிகக் குறைவாகும்.[7]

தெற்கின் எரிமலைப் பகுதியைத் தவிர, தீவின் வடக்கு பகுதியில், பெப்புவைச் சுற்றி குறிப்பிடத்தக்க மண் வெப்ப நீரூற்றுகள் காணப்படுகின்றன. இவை மிகவும் வெப்பமான சூழலில் உயிர்வாழும் திறன் கொண்ட நுண்ணுயிரிகளின் தளமாகும்.[8]

கல்வி

கியூஷுவில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள்:

தேசிய பல்கலைக்கழகங்கள்

  • கியுஷு பல்கலைக்கழகம்
  • கியுஷு தொழில்நுட்ப நிறுவனம்
  • சாகா பல்கலைக்கழகம்
  • நாகசாகி பல்கலைக்கழகம்
  • குமாமோட்டோ பல்கலைக்கழகம்
  • ஃபுகுயோகா கல்வி பல்கலைக்கழகம்
  • ஓய்தா பல்கலைக்கழகம்
  • மியாசாகி பல்கலைக்கழகம்
  • ககோஷிமா பல்கலைக்கழகம்
  • கனோயாவில் உள்ள தேசிய உடற்தகுதி மற்றும் விளையாட்டு நிறுவனம்
  • ரியுக்யஸ் பல்கலைக்கழகம்

உள்ளூர் அரசாங்கங்களால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்கள்

  • கிடாக்கியுஷு பல்கலைக்கழகம்
  • கியுஷு பல் கல்லூரி
  • ஃபுகுயோகா மகளிர் பல்கலைக்கழகம்
  • ஃபுகுயோகா ப்ரிபெக்சுரல் பல்கலைக்கழகம்
  • நாகசாகி ப்ரிபெக்சுரல் பல்கலைக்கழகம்
  • ஓய்டா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்
  • குமாமோட்டோவின் முதன்மை பல்கலைக்கழகம்
  • மியாசாகி நகராட்சி பல்கலைக்கழகம்
  • மியாசாகி ப்ரிபெக்சுரல் நர்சிங் பல்கலைக்கழகம்
  • ஒகினாவா ப்ரிபெக்சுரல் கலை பல்கலைக்கழகம்

முக்கிய தனியார் பல்கலைக்கழகங்கள்

  • ஃபுகுயோகா பல்கலைக்கழகம் - கியூஷுவில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பல்கலைக்கழகம்
  • குமாமோட்டோ காகுன் பல்கலைக்கழகம்
  • ரிட்சுமேகன் ஆசியா பசிபிக் பல்கலைக்கழகம்
  • சீனன் காகுயின் பல்கலைக்கழகம்
  • கியுஷு சாங்யோ பல்கலைக்கழகம்
  • தொழில் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார பல்கலைக்கழகம்

போக்குவரத்து

இந்த தீவு யப்பானின் பெரிய தீவான ஹொன்சுவுடன் கன்மொன் சுரங்கப் பாதைகளினால் இணைக்கப்படுகின்றது. கியூமன் புகையிரத நிறுவனத்தின் சான்யோ ஷிங்கன்சென் மற்றும் ஷிங்கன்சென் அல்லாத புகையிரதங்களும், சாலை போக்குவரத்தும் உண்டு. தீவின் புகையிரத போக்குவரத்து கியூஷு புகையிரத நிறுவனத்தாலும், நிஷிதெட்சு ரயில்வேயினாலும் இயக்கப்படுகின்றது

மேற்கோள்கள்

  1. "Ministry of Land, Infrastructure, Transport and Tourism.". மூல முகவரியிலிருந்து 9 August 2019 அன்று பரணிடப்பட்டது.
  2. Am. "Discover the Geography of the 4 Main Islands of Japan" (en).
  3. Cobbing, Andrew (2009). Kyushu, gateway to Japan : a concise history. Global Oriental. p. 157. ISBN 9789004213128. OCLC 754792858
  4. Cobbing, Andrew (2009). Kyushu, gateway to Japan : a concise history. Global Oriental. p. 3. ISBN 9789004213128. OCLC 754792858.
  5. "The Philippine Archipelago".
  6. "Japanese voters want a plan to handle a declining population".
  7. "Grads landing jobs near all-time low". The Japan Times".
  8. C.Michael Hogan. 2010. Extremophile. eds. E.Monosson and C.Cleveland. Encyclopedia of Earth. National Council for Science and the Environment, Washington DC. "Search - The Encyclopedia of Earth".
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.