கிடை வரிசை (தனிம அட்டவணை)

தொடர் ( period ) என்பது நீள்வடிவத் தனிம வரிசை அட்டவணையில் இடமிருந்து வலமாகச் செல்லும் கிடைமட்ட வரிசைகளில் ஒன்றாகும். ஒரு தொடர் வரிசையில் உள்ள எல்லா தனிமங்களும் ஒரே எண்ணிக்கையிலான எலக்ட்ரான் கூடுகளைப் பெற்றுள்ளன. ஒரு தொடரில் இடமிருந்து வலமாகச் செல்கையில் ஒவ்வொரு தனிமமும் ஒரு புரோட்டானை அதிகமாகப் பெறுகின்றன. ஒவ்வொரு தனிமத்தின் உலோகப்பண்பும் முன்னதாக உள்ள தனிமத்தைக் காட்டிலும் குறைகிறது. இதேபோல தனிம வரிசை அட்டவனையில் மேலிருந்து கீழாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து வரிசைகள் தொகுதிகள் எனப்படுகின்றன. ஒரு தொகுதியில் இடம்பெற்றுள்ள தனிமங்கள் அவற்ரின் இணைதிரன் கூட்டில் ஒரே எண்ணிக்கையில் எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளன. ஒரே இணைதிற்னையும் பெற்றுள்ளன. ஒரு தொகுதியில் அடுக்கப்பட்டுள்ள அனைத்துத் தனிமங்களும் ஒரே மாதிரியான இயற்பியல் மற்றும் வேதியல் பண்புகளைப் பெற்றுள்ளன. உதாரணமாக கார உலோகங்கள் முதல் தொகுதியில் அடுக்கப்பட்டுள்ளன. அதிக வினைத்திறன் மற்றும் மந்த வாயு எலக்ட்ரான் அமைப்பை அடைய ஓர் எலக்ட்ரானை இழத்தல் உட்பட ஒரே மாதிரியான பண்புகள் பலவற்றைப் பெற்றுள்ளன. 2016 ஆம் ஆண்டின் படி இதுவரை 118 தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தனிமவரிசை அட்டவனையில் அவற்றின் இடங்களும் உறுதிபடுத்தப்பட்டுள்ளன.

தனிம வரிசை அட்டவணையில் எண்ணிடப்பட்ட ஒவ்வொரு வரிசையும் தொடர் ஆகும்

நவீன ஆவர்த்தன விதியின்படி தனிமங்களை அவற்றின் அணு எண்களின் ஏறுவரிசையில் அமைத்தால் ஒத்த பண்புகளை உடைய தனிமங்கள் சீரான் இடைவெளிக்குப் பின் அமைகின்றன. தற்கால குவாண்டம் இயங்கியல் கோட்பாடுகளின்படி ஒரு தொடரில் அணு எண் உயர்வதற்கு ஏற்ப அவற்றின் ஆற்றல் கூடுகள் எலக்ட்ரான்களால் ஒரு மந்தவாயு அமைப்பு வரும்வரை முறையாக நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு எலக்ட்ரான் கூடும் பூர்த்தி செய்யப்பட்டுக் கொண்டே வருவதை அட்டவணையில் உள்ள தொடர்கள் காட்டுகின்றன.

மாடலங் விதியின்படி அதிகரிக்கும் ஆற்றலின் அடிப்படையில் ஆர்பிட்டால்கள் எந்தவரிசையில் நிரம்பவேண்டும் என்பதை விளக்குகிறது. ஒவ்வொரு மூலைவிட்ட சிவப்பு அம்புக்குறியும் வேறுபட்ட மதிப்பை குறிக்கிறது. n + .

தனிம வரிசை அட்டவணையில் அமைந்துள்ள எசு தொகுதி மற்றும் பி தொகுதி தனிமங்கள் ஒரே தொடருக்குள் இருக்கும் போது பொதுவாக ஆவர்த்தன போக்கையும் பண்புகளில் ஒற்றுமையையும் காட்டுவதில்லை. மேலிருந்து கிழாகச் செல்லும் தொகுதிகளில் உள்ள தனிமங்கள் இப்பண்புகளை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் டி தொகுதி தனிமங்கள் தொடர்களில் இந்த பண்புகளை வெளிப்படுத்துகின்றன. அதேபோல எப் பிரிவு தனிமங்கள் தொடர்களில் அதிக அளவு ஒற்றுமையை காட்டுகின்றன. இயற்கையில் தோன்றிய தனிமங்கள் தனிம வரிசை அட்டவனையின் ஏழு தொடர்களில் இடம்பெற்றுள்ளன. எட்டாவது தொடரில் உள்ள தனிமங்கள் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவை ஆகும். குறிப்பாக 2016 ஆம் ஆண்டுக்கு பின்னால் தயாரிக்கப்பட்டவை ஆகும். இடமிருந்து வலமாகச் செல்லும் கிடைமட்ட வரிசைகள் தொடர்கள் எனப்படுகின்றன. தனிம வரிசை அட்டவணையில் ஏழு தொடர்கள் உள்ளன.

மேற்கோள்கள்

  1. Palmer, David (November 13, 1997). "Hydrogen in the Universe". NASA. பார்த்த நாள் 2008-02-05.
  2. "hydrogen". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். (2008).
  3. "Helium: physical properties". WebElements. பார்த்த நாள் 2008-07-15.
  4. "Helium: geological information". WebElements. பார்த்த நாள் 2008-07-15.
  5. Cox, Tony (1990-02-03). "Origin of the chemical elements". New Scientist. பார்த்த நாள் 2008-07-15.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.