கிஜிஜி

கிஜீஜீ (Kijiji இசுவாகிலி:}}, சிற்றூர்[1]) உள்ளூர் வலைவழி வரிவிளம்பரங்களை பதிவதற்கான வலைவழி ஊரக சமூகங்களின் மைய பிணையமாகும். இது இபே நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். மார்ச் 2005இல் துவக்கப்பட்டது.[2] கிஜீஜீ வலைத்தளங்கள் தற்போது செருமனியின் 300க்கும் மேற்பட்ட நகரங்களில் அமைந்துள்ளன. மேலும் கிஜீஜீ சமூகங்கள் கனடா, பிரான்சு, இத்தாலி, சீனா, இந்தியா, தைவான், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, உருசியா ஆஸ்திரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் உள்ள நகரங்களிலும் உருவாகியுள்ளன. ஐக்கிய அமெரிக்காவில் தேர்ந்த சில நகரங்களுக்கு சூன் 29,2007இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

கிஜீஜீ
உரலிhttp://www.Kijiji.ca/
மகுட வாசகம்இலவச உள்ளூர் வரிவிளம்பரங்கள்
தளத்தின் வகைவரிவிளம்பரங்கள்
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரிமையாளர்இபே
உருவாக்கியவர்இபே


கிஜீஜீ கிறெக் பட்டியல் போன்ற சேவைகளை வழங்கி அதன் போட்டியாளராக இருப்பினும் முக்கிய வேறுபாடாக கிஜீஜீயின் இணையப் போக்குவரத்து ஐக்கிய அமெரிக்காவில் மிகவும் குறைவாக இருப்பதும்[3] வளர்ப்பு விலங்கினப் பகுதி கொண்டிருத்தலும் ஆகும். இதன் உரிமையாளரான இபே நிறுவனம் கிறெக் பட்டியலிலும் பங்கு வைத்துள்ளது. இரு நிறுவனங்களுக்குமிடையே தங்கள் வணிகத்தை பாதித்ததாகவும் வணிக இரகசியங்களைக் கவர்ந்ததாகவும் பிணக்கு ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்றது.[4][5]

இபே வரிவிளம்பரங்கள் பிரிவின் தரவுகளின்படி இது கனடாவில் முதன்மையான வலைவழி வரிவிளம்பர சேவையாக விளங்குகிறது[6]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.