காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்

காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை பாடல் எண் 342 (குறிஞ்சித் திணை)

பாடல்

கலை கைதொட்ட கமழ் சுளைப் பெரும்பழம்
காவல் மறந்த கானவன் ஞாங்கர்க்
கடியுடைய மரந்தொறும் படுவலை மாட்டும்
குன்ற நாட! தகுமோ பைஞ்சுனைக்
குவளைத் தண் தழை இவள் ஈண்டு வருந்த
நயந்தோர் புன்கண் தீர்க்கும்
பயம் தலைப்படாப் பண்பினை எனினே

பாடல் தரும் செய்தி

கலை என்னும் ஆண்குரங்கு பலாப்பழத்தைத் தோண்டிவிட்டது என்று பழுத்துள்ள பகுதிக்கு வலை போடும் நாட்டைக் கொண்டவன் தலைவன். அவன் பண்பு இல்லாதவன்.

தோழி தலைவனிடம் இவ்வாறு பேசித் தலைவியைத் திருமணம் செய்துகொண்டு அடையுமாறு வற்புறுத்துகிறாள்.

பண்பு

விரும்பி வந்தவரின் துன்பம் போக்குவதே வாழ்க்கையின் பயன். அதுவே பண்பு.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.