காவல்துறையின் தலைமை இயக்குனர்
இந்தியாவில் காவல்துறையின் தலைமை இயக்குனர் (ஆங்கிலம்:Director General of Police) அல்லது காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குனர் என்பது இந்தியக் காவல்துறையின் மிக உயரிய பதவியாகும். இப்பதவியில் உள்ளவர்கள் அனைவரும் இந்தியக் காவல் பணி அதிகாரிகள் ஆவர். இவர்கள் பொதுவாக ஒரு மாநிலத்தில் காவல்துறைக்கு தலைமை வகிப்பர். ஆயினும் இவர்கள் சிறைத்துறை, குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை முதலிய மாநில அரசின் துறைகளின் தலைவர்களாகவோ அல்லது நடுவண் புலனாய்வுச் செயலகம், மத்திய சேமக் காவல் படை போன்ற நடுவண் அரசின் துறைகளிளோ பணியமர்த்தப்படலாம். அசோகச் சின்னம், அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து இப்பதவியின் சின்னமாகும்.[1][2]

இந்தியக் காவல் பணியில் தலைமை இயக்குனர் பதவியின் சின்னம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.