கார்லோ அன்செலாட்டி

கார்லோ அன்செலாட்டி (Carlo Ancelotti, பிறப்பு சூன் 10, 1959) இத்தாலி நாட்டைச் சேர்ந்த கால்பந்து மேலாளர் மற்றும் முன்னாள் வீரராவார். தனது ஆட்டக்காலத்தில் நடுக்கள வீரராக ஆடினார். தற்போது செருமனியின் பேயர்ன் மியூனிக் அணியின் மேலாளராக இருக்கிறார். தற்போதைய மேலாளர்களுள் இவர் மட்டுமே சாம்பியன்ஸ் லீக் கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே மேலாளர் ஆவார் (ஏ.சி. மிலான் அணியுடன் மூன்று இறுதிப் போட்டிக்குச் சென்று இரண்டு முறை வென்றார்; ரியல் மாட்ரிட் அணியுடன் மேலும் ஒரு முறை கோப்பையை வென்றிருக்கிறார்.). கால்பந்து மேலாளர்களுள் அதிசிறந்த மேலாளர்களுள் ஒருவராகவும் வரலாற்றில் அதிக கோப்பைகள் வென்ற மேலாளர்களுள் ஒருவராகவும் விளங்குகிறார்.[1][2][3][4]

கார்லோ அன்செலாட்டி
Carlo ancelotti.jpg
2013-ஆம் ஆண்டில் அன்செலாட்டி
சுய விவரம்
பிறந்த தேதி10 சூன் 1959 (1959-06-10)
பிறந்த இடம்Reggiolo, இத்தாலி
உயரம்1.79 m (5 ft 10 12 in)
ஆடும் நிலைநடுக்களவீரர்
கழக விவரம்
தற்போதைய கழகம்பேயர்ன் மியூனிக் (மேலாளர்)
இளநிலை வாழ்வழி
1973–1975Reggiolo
1975–1976பர்மா கால்சியோ 1913 கால்பந்துக் கழகம்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
1976–1979பர்மா கால்சியோ 1913 கால்பந்துக் கழகம்55(13)
1979–1987ரோமா171(12)
1987–1992ஏ.சி. மிலான்112(10)
Total338(35)
தேசிய அணி
1981–1991இத்தாலி26(1)
மேலாளராயிருந்த அணிகள்
1995–1996ரெஜ்ஜியானா 1919 கால்பந்துக் கழகம்
1996–1998பர்மா கால்சியோ 1913 கால்பந்துக் கழகம்
1999–2001யுவென்டசு
2001–2009ஏ.சி. மிலான்
2009–2011செல்சீ
2011–2013பாரீஸ் செயின்ட் ஜெர்மன்
2013–2015ரியல் மாட்ரிட்
2016–பேயர்ன் மியூனிக்
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன..
அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது. † தோற்றங்கள் (கோல்கள்).

உசாத்துணைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.