அனத்தோலி கார்ப்பொவ்

அனத்தோலி யெவ்கேனியெவிச் கார்ப்பொவ் (Anatoly Yevgenyevich Karpov, ரஷ்ய மொழி: Анатолий Евгеньевич Карпов; பிறப்பு: மே 23, 1951) ரஷ்யாவின் சதுரங்க வீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும் ஆவார். 1975 ஆம் ஆண்டில் இருந்து 1985 வரையில் உலக சாம்பியன் ஆகத் திகழ்ந்தவர். 1986 முதல் 1990 வரையில் இவர் இப்பட்டத்தை மீளப் பெற்வதற்காக ஒவ்வோர் ஆண்டும் போட்டியிட்டவர். 1993 முதல் 1999 வரையில் இவர் ஃபிடே உலகச் சாம்பியனாகவும் இருந்தார்.

அனத்தோலி கார்ப்பொவ்
முழுப் பெயர்அனத்தோலி யெவ்கேனியெவிச் கார்ப்பொவ்
நாடு உருசியா
தலைப்புகிராண்ட்மாஸ்டர் (1970)
உலக சாம்பியன்1975-1985
1993-1999 (ஃபிடே)
FIDE தரவுகோல்2655
(ஏப்ரல் 2008 இல் 65வது)
எலோ தரவுகோள்2780 (ஜூலை 1994)

இவரது எலோ தரவுகோள் 2780 ஆகும். இவர் பங்குபற்றிய போட்டிகளில் 161இல் இவர் முதலாட்டக்காரனாக வெற்றி பெற்றார்.

2005 ஆஅம் ஆண்டில் இருந்து இவர் ரஷ்யப் பொது அவையில் (Public Chamber of Russia) ஓர் உறுப்பினராக உள்ளார்.

1975 இல் உலக வீரரான பொபி ஃபிஷர் அனதோலி கார்ப்பொவ்வுடன் உலகப் போட்டியில் பங்குபற்ற மறுத்ததால் கார்ப்பொவ் உலக வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டார். பொபி ஃஇஷர் போட்டி நடைபெறுவதற்கு 10 நிபந்தனைகளை விடுத்திருந்தார். ஆனால் பிடே அவரது நிபந்தனைகளை ஏற்க மறுத்ததால் ஃபிஷர் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இதனால் கார்ப்பொவ் உலக வீரராக அறிவிக்கப்பட்டார். ஆனாலும் பின்னர் ஃபிஷருடன் கார்ப்பொவ் விளையாட எடுத்துக் கொண்ட முயற்சிகள் வெற்றி பெறாததால் கார்ப்பொவ் எந்நாளிலும் ஃபிஷருடன் சதுரங்கப் போட்டி ஒன்றில் பங்கு பெற முடியாமல் போனது.

வெளி இணைப்புகள்

முன்னர்
பொபி ஃபிஷர்
மரபுவழி உலக சதுரங்க வீரர்
19751985
பின்னர்
காரி காஸ்பரொவ்
முன்னர்
காரி காஸ்பரொவ்
ஃபிடே உலக சதுரங்க வீரர்
19931999
பின்னர்
அலெக்சாண்டர் காலிஃப்மான்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.