கார்த்தூசியன் சபை
கார்த்தூசியன் சபை அல்லது புனித புரூனோவின் சபை என்பது அடைபட்ட வாழ்வுவாழும் கத்தோலிக்க துறவறச்சபை ஆகும். இதை கோல்ன் நகரின் புனித புரூனோ, 1084 ஆம் ஆண்டில் நிறுவினார். இச்சபை நூர்சியாவின் பெனடிக்ட்டின் சட்டங்களை விடுத்து குழும வாழ்வு மற்றும் தனித்த வாழ்வு ஆகியவற்றின் கலவையாக ஒரு புதிய சட்டத்தைத் தனக்கெனக் கொண்டுள்ளது. அச்சட்டங்களை இசுட்டடூட்சு (Statutes) என அழைப்பர். கார்த்தூசியன் என்னும் பெயர் இச்சபையின் முதல் மடம் நிறுவப்பட்ட இடமான கார்த்தூசிய மலைப்பள்ளத்தாக்கின் பெயரிலிருந்து பெறப்பட்டதாகும். இச்சபையின் குறிக்கோள் உரை உலகு நிலையற்றது, சிலுவையே நிலையானது (இலத்தீன்:Stat crux dum volvitur orbis) என்பதாகும்.[1]
![]() | |
சுருக்கம் | O.Cart., Carthusians |
---|---|
குறிக்கோள் உரை | Stat crux dum volvitur orbis |
உருவாக்கம் | 15 ஆகத்து 1084 |
வகை | கத்தோலிக்க துறவற சபை |
தலைமையகம் | கிராண்டே சார்ட்றேயூசு (தாயகம்) |
முக்கிய நபர்கள் | புனித புரூனோ, நிறுவுனர் |
வலைத்தளம் | www.chartreux.org www.vocatiochartreux.org |
மேற்கோள்கள்
- Douglas Raymund (1913). "The Carthusian Order". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். அணுகப்பட்டது 2015-01-01.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.