கார்த்திகேய சிவசேனாதிபதி

கார்த்திகேய சிவசேனாதிபதி என்பவர் முன்னாள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினரும்,[1] சல்லிக்கட்டு, நாட்டு மாடுகள் தன்னார்வலரும் ஆவார். இவர் காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மையத் தலைவராக உள்ளார். சல்லிக்கட்டிற்காக ஆவணப்படம் எடுத்தல், வழக்குகளை நடத்துதல், நாட்டு மாடுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளைச் செய்து வருகிறார்.[2] ஆறு கோடி ரூபாய் செலவு செய்து காங்கேயம் காளைகளின் விந்தணுக்களைச் சேமித்து வைத்திருக்கிறார்.[3]

கார்த்திகேய சிவசேனாதிபதியை சித்தரிக்கும் ஓவியம்

இவர் 2013ல் மெரினா கடற்கரையில் மிகச்சில நபர்களுடன் இணைந்து சல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். 2017இல் மாணவர்களின் சல்லிக்கட்டு போராட்டத்திற்கு வித்திட்டதாகக் கருதப்படும் இசையமைப்பாளர் ஆதியின் பாடல் இவருடைய சந்திப்பிற்குப் பிறகே உருவானது.[4]

ஆதாரங்கள்

  1. http://ywcwpzx.dinamalar.in/m/detail.php?id=1688966
  2. ஜெர்ஸியை இறக்குமதி செய்யக்கூடாது - கார்த்திகேய சிவசேனாதிபதி 12 பிப்ரவரி 2017
  3. விவசாயிகளுக்குக் குரல் கொடுத்தால், ஏன் இப்படி கொதிக்கிறார்கள்? ம.சுசித்ரா: இந்து தமிழ் திசை இதழ் - 02 ஜூலை 2016
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.