காரடையான் நோம்பு

காரடையான் நோம்பு என்பது காமாட்சியம்மனை பெண்கள் வழிபட்டு கடைபிடிக்கும் நோம்பாகும். [1] இதனை சாவித்ரி நோம்பு , காமாட்சி விரதம், கவுரி விரதம் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. சாவித்ரி காட்டில் அடை செய்து படைத்தமையால் காரடையான் நோம்பு என்று அழைக்கின்றனர்.

இந்த நோம்பினால் கணவனுடைய ஆயுளை அதிகரிக்கும் என நம்புகின்றார்கள். கற்பில் சிறந்தவளான சாவித்திரி தன்னுடைய கணவனின் ஆயுள் காலம் முடிந்து யமதேவன் அவனுடைய உயிரைப் பரித்துச் சென்ற போதிலும், யமனுடனிமிருந்து மீட்டு வந்தாள் என்று நம்பப்படுகிறது. சாவித்ரி ஆனிமாத அமாவாசையிலிருந்து மூன்று நாட்கள் விரதம் மேற்கொண்டாள். இந்த காலத்தினை சாவித்ரி விரத கல்பம் என்கின்றனர்.

இவ்விரத வழிபாடானது மாசி மாதம் கடைசி நாள் இரவு தொடங்கப்பட்டு பங்குனி மாதம் முதல் நாள் நிறைவு பெறுகிறது. வழிபாட்டின் முடிவில் வழிபாட்டில் இடம் பெற்ற நோன்பு கயிறு பெண்களால் அணியப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொன்மம்

திரியுமத்சேனன் மன்னனின் மகன் சத்யவான். அசுபதி மன்னின் மகள் சாவித்திரி. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. சாவித்திரி கவுரி விரதத்தினை மேற்கொண்டிருந்தாள். அந்த விரதக் காலத்திலேயே சத்யவான் காட்டில் இறந்தார்.

தான் மேற்கொண்ட கவுரி விரதத்தினை முடிக்க மண்ணால் செய்த வடையை செய்து வழிபட்டாள். விரதம் பூர்த்தியானது. அதன் பின்பு யமதர்மனிடம் வேண்டி தன்னுடைய கணவனை மீட்டாள்.

ஆதாரங்கள்

  1. தினமலர் பக்திமலர் 12.03.2015 பக்கம் 2-3
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.