காம்பியா ஆறு

கம்பியா ஆறு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள முக்கியமான ஆறுகளில் ஒன்று. 1,120 கிமீ (700 மைல்)நீளம் கொண்ட இது, வட கினியாவில் உள்ள பவுத்தா சாலன் சமவெளியில் இருந்து செனகல், கம்பியா ஆகிய நாடுகள் ஊடாக பஞ்சூல் நகருக்கு அண்மையில் அத்திலாந்திக் பெருங்கடலில் கலக்கிறது. இதன் நீளத்தின் அரைப் பகுதி கப்பல் போக்குவரத்துக்கு உகந்தது. மேற்கு ஆப்பிரிக்காவின் தலைநிலத்தில் உள்ள மிகச் சிறிய நாடான கம்பியா இந்த ஆற்றுடன் வலுவான பிணைப்புக்களைக் கொண்டது. ஆற்றின் கீழ்ப்பகுதியில் அரைப்பங்கிலும் சற்றுக் கூடுதலான பகுதியையும் அதன் இரு கரைகளையுமே இந்த நாடு உள்ளடக்கியுள்ளது.

கம்பியா ஆறு
River
நாடு கினியா, செனகல், கம்பியா
உற்பத்தியாகும் இடம் பவுத்தா சாலன்
கழிமுகம் அத்திலாந்திக் பெருங்கடல்
 - அமைவிடம் பஞ்சூல்
 - ஆள்கூறு 13°28′N 16°34′W
நீளம் 1,120[1] கிமீ (. மைல்)
கம்பியா ஆறு வடிநிலத்தைக் காட்டும் நிலப்படம்
கம்பியா ஆறு வடிநிலத்தைக் காட்டும் நிலப்படம்

பவுத்தா சாலனில் இருந்து இந்த ஆறு வடமேற்கு நோக்கிச் சென்று செனகலில் உள்ள தம்பாகவுண்டா பகுதியை அடைகிறது. அங்கே நியோக்கோலோ-கோபோ தேசியப் பூங்காவினூடாகச் செல்கிறது. பின்னர் கம்பியா ஆறு பத்தோத்தோவில் கம்பியாவுக்குள் நுழைய முன், நியேரி கோ, கூலூன்டூ ஆகிய ஆறுகள் இவ்வாற்றோடு இணைகின்றன. இப்பகுதியில் இருந்து ஆறு மேற்கு நோக்கியே சென்றாலும், வளைந்து வளைந்தும் ஆங்காங்கே நுகத்தடி வளைவுகளுடனும் காணப்படுகிறது. இதன் கழிமுகத்திலிருந்து 100கிமீ தொலைவிலிருந்து ஆற்றின் அகலம் படிப்படியாக அதிகரிக்கின்றது. கடலைச் சந்திக்கும் இடத்தில் இதன் அகலம் 10கிமீ.

கழிமுகப் பகுதியில், சுபூரேக்கு அருகில் குந்தா கின்தே தீவு உள்ளது. இது முன்னர் அடிமை வணிகத்தின் போது பயன்படுத்தப்பட்டது. இது யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக உள்ளது.

மேற்கோள்கள்

  1. "Gambia River". Encyclopædia Britannica.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.