காசுபர் கோட்பிரீடு சுவீசர்
காசுபர் கோட்பிரீடு சுவீசர் (Kaspar Gottfried Schweizer) (பிப்ரவரி 16, 1816 – ஜூலை 6, 1873) ஒரு சுவீடிய வானியலாளr ஆவார். இவர் 1845 இல் மாஸ்கோ சென்று அங்குள்ள அளக்கையியல் நிறுவனத்தில் கணிதவியல், வானியல் பேராசிரியர் ஆனார். பின்னர், இவர் மாஸ்கோ பல்கைக்கழக வான்காணகத்தின் இயக்குநரானார்.
இவர் சுவிட்சர்லாந்து சூரிச் படைவீரர் குடியிருப்பில் வைலா எனுமிட்த்தில் பிறந்தார். இவர் 1839 இல் கோன்க்சுபர்கு சென்று பிரீட்ரிக் வில்கெல்ம் பெசேவுக்கு உதவி செய்தார். இவர் 1841 முதல் 1845 வரை புல்கோவோ வான்காணகத்தில் பிரீட்ரிக் கியார்கு வில்கெல்ம் வான் சுத்ரூவ அவர்களின் கீழ் பணிபுரிந்தார்.
இவர் ஐந்து வால்வெள்ளிகளையும் (புபொப 7804) எனும் வான்பொருள் ஒன்றையும் 1864 நவம்பர் 11 இல் கண்டுபிடித்துள்ளார்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.