காங்கேயன் (புலவர்)

காங்கேயன் என்பவன் ஒரு புலவன். இவன் கொங்கு மண்டலத்தில் உள்ள மோரூரில் [1] வாழ்ந்தவன். உலகில் செந்தமிழ் ஆய்பவர்கள் நன்மை அடையும் தக்கதோர் வகையில் உரிச்சொல் நிகண்டு என்னும் நூலை இயற்றினான். இதனைக் கொங்கு மண்டல சதகம் 91-ஆம் பாடல் தெரிவிக்கிறது.[2][3]

மேற்கோள்

  1. கொங்கு நாட்டு மோரூர்
  2. இதனைத் தெரிவிக்கும் பாடல்:

     அலைகடல் சூழும் அவனியில் செந்தமிழ் ஆய்பவர்கள்
    நலனுறத் தக்க வகையாக உள்ள நனி மகிழ்ந்தே
    இலகும் உரிச்சொல் நிகண்டு வெண்பாவில் இசைத்த கலை
    வலவ எழில் காங்கேயன் வாழுமோரூர் கொங்கு மண்டலமே. 91

  3. கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம், சாரதா பதிப்பகம், 2008, முனைவர் ந. ஆனந்தி தெளிவுரை (கொங்குமண்டல வரலாறு)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.