கா. வேழவேந்தன்
வேழவேந்தன் என்பவர் தமிழ்க்கவிஞர். இவர் 05-5-1936 அன்று கும்மிடிப்பூண்டியில் உள்ள காரணி எனும் சிற்றூரில் பிறந்தவர். தற்போது சென்னை மயிலாப்பூரில் வசிக்கின்றார்.
கல்வியும் பணியும்
இவர் இந்து தியாலாஜிகல் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற இவர் சட்டக் கல்லூரியில் பயின்று வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளார்.தமிழக சட்டப் பேரவையின் உறுப்பினராக 1967-76 வரை பணியேற்றார். அதே காலத்தில் சில ஆண்டுகள் தொழிலாளர் நல அமைச்சரகப் பணிபுரிந்துள்ளார்.
எழுத்துப் பணிகள்
இவர் மாணவராக இருந்தபோது,'முத்தாரம்' இதழில் 'மழலைச் சிலை' எனும் கவிதையை எழுதினார். இக்கவிதை மு.வ அவர்களால் பாராட்டப்பட்டது. தமது 77 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், தமது ஆசிரியராகிய மு.வவைப் பற்றி,டாக்டர் மு.வ.வின் தனிப்பெரும் மாட்சி எனும் நூலை வெளியிட்டார்.[1] தமிழ்த்தேன் எனும் இதழைத் தொடங்கி நடத்தினார்.
படைப்புகள்
கட்டுரைத் தொகுப்புகள்:
- வெற்றிக்கு ஒரு முற்றுகை
- தமிழா? அமிழ்தா?
- தெரிய...தெளிய...
- மனக்காட்டுத் தேனடைகள்
கவிதைத் தொகுப்புகள்:
- அனல் மூச்சு
- தமிழா எங்கே போகிறாய்
- ஏக்கங்களின் தாக்கங்கள்
- தூறலும் சாரலும்
- வண்ணத் தோகை
பட்டங்களும் விருதுகளும்
கவிஞர் தாகூர் நூற்றாண்டு விழா கவிதைப் போட்டியில் தமிழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.தமிழக அரசு இவரின், வண்ணத் தோகை கவிதை நூலுக்குப் பரிசு வழங்கிச் சிறப்பித்தது.[2] கலைமாமணி விருது,பாவேந்தர் விருது முதலான விருதுகளைப் பெற்றுள்ளார்.