கா. சண்முகம்

காசிவிசுவநாதன் சண்முகம் (Kasiviswanathan Shanmugam, பிறப்பு: மார்ச் 1959), என்பவர் சிங்கப்பூரின் அரசியல்வாதி ஆவார். மக்கள் செயல் கட்சியின் உறுப்பினரான இவர் 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் இடம்பெற்ற தேர்தல்களை அடுத்து சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சராகவும் சட்ட அமைச்சராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

காசிவிசுவநாதன் சண்முகம்

வாழ்க்கைக் குறிப்பு

இந்தியத் தமிழரான சண்முகம் 1972 முதல் 1977 வரை ரஃபில்ஸ் கல்விக்கழகத்தில் கல்வி பயின்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கல்வி பயின்று 1984 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றர். 1985 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் வழக்குரைஞர்கள் அமைப்பில் (Bar) சேர்த்துக்கொள்ளப்பட்டார். பின்னர் அவர் அலென் அண்ட் கிளெண்டில் என்ற சிங்கப்பூரின் தனியார் சட்ட நிறுவனத்தில் இணைந்து பணியாற்றினார்.

அரசியலில்

1988 ஆம் ஆண்டில் சண்முகம் செம்பாவாங் குழுத்தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். நாடாளுமன்றத்தில் பின்வரிசை உறுப்பினராக இருந்து கொண்டு தொடர்ந்து தனது வழக்கறிஞர் தொழிலையும் செய்து வந்தார். 2008 ஆம் ஆண்டில் சட்ட அமைச்சராக பேராசிரியர் எஸ். ஜெயக்குமாரின் இடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்[1]. 2010 ஆம் ஆண்டில் இவர் உட்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

ஊடகங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.