கழார் கீரன் எயிற்றியார்

கழார்கீரன்எயிற்றியார்


      எயிற்றியார் என அறியப்படும் இப்பெண்கவிஞர் கழார் என்னும் ஊரைச் சேர்ந்த கீரன் என்பவரின் துணைவியார் ஆவார்.  கழார் என்ற ஊர், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது.  தலைவனைப் பிரிந்து கார்காலத்தில் வாடைக்காற்றினால் வாடி நள்ளிரவிலும் காத்திருக்கும் பெண்ணின் மனத்தினை நுட்பான கவிதை வரிகளாக்கியுள்ளார்.  இவர் பாடிய பாடல்கள் அகநானு்ற்றில் நான்கும் குறுந்தொகையில் இரண்டும் நற்றிணையில் இரண்டும் இடம் பெற்றுள்ளன.
                   மாசுஇல் மரத்த பலிஉண் காக்கை
                   வளிபொரு நெடுஞ்சினை தளியொடு துாங்கி,
                   வெல்போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்
                   நல்வகை மிகுபலிக் கொடையோடு உகுக்கும்......
                                                         நற்றிணை 281 : பாலை.


        பலிச்சோறு உண்ணும் காக்கை, வெற்றியடையும் போரைச் செய்யும் சோழருடைய 'கழார்' என்னும் ஊரில் மாசற்ற மரத்திலுள்ள காற்று மோதும் நெடிய கிளையில் அமர்ந்து மழைத்துளியில் அசைந்து கொண்டிருக்கும்.  கொள்ளத்தகுந்த நல்ல வகையான மிகுந்த பலிக்கொடையோடு போடப்படும் அடங்காத சோற்றுத் திரள்களோடு அழகிய புது வருவாய் போன்ற இறைச்சியுடைய பெருஞ்சோற்றுத் திரள்களையும் நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும்.  மழை பொழிந்த மயக்கமான இருளையுடைய நடுநிசியிலும் காதலர் பக்கத்தில் இருக்கவும் நாம் கடுங்குளிரால் மிகப் பெரிதும் துன்புற்று உறங்காமல் இருந்ததையும் அறிந்தவர் இப்பொழுது அன்பிலாதவராக உள்ளார்.

மேற்கோள்கள்

  1.<reference ந.முருகேசபாண்டியன்,அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், டிசம்பர் - 2008
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.