களுவாஞ்சிக்குடி
களுவாஞ்சிக்குடி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். மட்டக்களப்பு நகரில் இருந்து தென்கிழக்கில் 27 கி.மீ. தூரத்தில் உள்ளது. களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் களுவாஞ்சிக்குடி தெற்கு, களுவாஞ்சிக்குடி வடக்கு, களுவாஞ்சிக்குடி வடக்கு 1 என 3 கிராம சேவையாளர் பிரிவுகள் காணப்படுகின்றன. இங்குள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 1,814 ஆகும்.[1] களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்திற்கான அஞ்சல் குறியீட்டு இலக்கம் 32000 ஆகும்.[2]
களுவாஞ்சிக்குடி | |
---|---|
நகரம் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு |
மாவட்டம் | மட்டக்களப்பு |
பிரதேச செயலாளர் பிரிவு | மண்முனை தெற்கு, எருவில் பற்று |
வரலாறு
மாகோன் காலத்தில் மட்டக்களப்பில் இருந்த ஏழு குடிகளுள் ஒன்றாகிய கவுத்தன்குடி இங்கு குடியேறியதாக மட்டக்களப்புத் தமிழகம் குறிப்பிடுகின்றது.[3]
உசாத்துணை
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.