கல்வி நுட்பவியல்
கல்வி நுட்பவியல் (educational technology) என்பது கற்றலை எளிதாக்கி தகுந்த தொழில்நுட்ப நிகழ்முறைகள் மற்றும் வளங்களை உருவாக்குதல், பயன்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல் போன்ற செயல்பாடுகள் மூலம் மேம்படுத்தும் ஆய்வு மற்றும் நடைமுறைகள் ஆகும். கல்வி நுட்பவியல் என்பது வெளி வன்பொருள் மற்றும் கல்வி கோட்பாடுகளின் பயன்பாடு ஆகும். கற்றல் கோட்பாடுகள், கணினி அடிப்படையிலான பயிற்சி, மின் கற்றல் மற்றும் தானியங்கி தொழில்நுட்பங்களில் பயன்படுத்தும் தானியங்கி கற்றல் போன்ற பல்வேறு கூறுகளை உள்ளடக்கி சூழ்ந்திருக்கிறது அதன்படி கல்வி நுட்பவியலின் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை வருவிக்கும் பல்வேறுபட்ட தனித்தியங்கும் அம்சங்கள் கல்விநுட்பவியலில் உள்ளது.
கல்வி நுட்பவியல் என்பது கற்றலுக்கான கல்வி அணுகுமுறையின் கருத்தியல் மற்றும் பயிற்சியாகும். கல்வி நுட்பவியல் என்பது அறிவுத்தொடர்பு மற்றும் முன்னேற்றம் மற்றும் பரிமாற்றத்தை வளர்க்க உதவும் தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் ஊடகங்கள் ஆகும். கல்வி நுட்பவியல் என்பது மாணவர் மற்றும் கலைத்திட்டம் மேலாண்மை மற்றும் கல்வி மேலாண்மைத் தகவல் முறைகள்(EMIS) கருவிகளை உள்ளடக்கிய கற்றல் மேலாண்மை அமைப்பேயாகும்(LMS).
கல்வி நுட்பவியல் என்பது அதுவே ஒரு கல்விப் பாடமாகும். இது போன்ற பாடப்பிரிவுகள் கணினி படிப்புகள் அல்லது தகவல் தொடர்பு நுட்பவியல் என்று அழைக்கப்படுகின்றன.