கல்லாடம் (சைவத் திருமுறை)

கல்லாடம் என்னும் சைவ நூல் கல்லாடர் என்பவரால் இயற்றப்பட்டது. ஒன்பதாம் திருமுறைகளில் ஒன்றான இந்த நூல் 11ஆம் நூற்றாண்டில் தோன்றியது. 102 ஆசிரியப் பாக்கள் கொண்டது. இவற்றில் 2 பாயிரம். அடுத்து வரும் 100 பாடல்கள் நூல். ‘கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே’ என்பது சைவ சமயப் பழமொழி. சிவன் பற்றிய கதைகள் இதில் மலிந்துள்ளன. வெறிவிலக்கல், பாடல் 101 ஆறு பார்த்து உற்ற அச்சக் கிளவி பாடல் 102 முதலான அகத்திணைக்கு உரிய துறைத்தலைப்புகள் இதன் பாடல்களுக்குத் தலைப்பாக இடப்பட்டுள்ளன.

இதில் உள்ள சில செய்தித் தொடர்கள்
  • கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ் கூறி [1]
  • தன்கண் போலும் எண்கண் நோக்கி [2]
  • கன்னி கொண்டிருந்த மன்னருட் கடவுள் [3]
  • பாரிடம் குனிப்ப ஆடிய பெருமான் [4]

'அன்பின் ஐந்திணை' என்று அறுபது சூத்திரம்
கடல்அமுது எடுத்துக் கரையில் வைத்ததுபோல்
பரப்பின் தமிழ்ச்சுவை திரட்டி மற்றவர்க்குத்
தெளிதரக் கொடுத்த தென்தமிழ்க் கடவுள் [5]

கருவிநூல்

அடிக்குறிப்பு

  • கல்லாடம் நூல்
  1. பாடல் 3
  2. பாடல் 4
  3. பாடல் 8
  4. பாடல் 9
  5. பாடல் 5
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.