கலசம்

கலசம் (ஒலிப்பு ) (Kalasam) என்பது இந்து கோவில்களில் கோபுர உச்சியில் காணப்படும் ஒரு உறுப்பு ஆகும். கலசம் என்பது கோவில்களின் அடையாளமாக கருதப்படுகிறது. கோவில்கள் புதுப்பிக்கப்படும்போது கலசங்கள் மாற்றப்பட்டு யாகங்கள் நிகழ்த்தப்படும் நிகழ்வினை கும்பாபிஷேகம் என்பர். பெரும்பாலான கலசங்கள் உலோகங்களால் செய்யப்படுகின்றன. சில இடங்களில் கல்லால் செய்யப்படுவதும் உண்டு. கோவில் கோபுரங்களையும் கொடி மரங்களையும் காண்பதுவுமே புனிதமாக கருதப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோபுரக்கலசங்களில் உள்ள தானியங்கள் குடமுழுக்கின்போது மாற்றப்படுகின்றன. கோபுர கலசங்கள் இடிதாங்கிகளாக செயல்படுகிறது எனறு சிலர் கூறுவர் எனினும் இதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை. இந்தக் கூற்று தவறானது என்பதை மின்னல் காரணமாக தஞ்சை பெரியகோயில் கலசம் உடைந்த சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. இந்த நிகழவு 2010 நவம்பர் 28 அன்று நடந்தது. "இராஜராஜன் திருவயில்" கோபுர கலசங்களை மின்னல் தாக்கியபோது அது சேதமடைந்தது. அதேசமயம் இடிதாங்கி பொருத்தப்பட்ட "கேரளாந்தகன் வாயில்"லில் குறைந்த சேதமே ஏற்பட்டது (இந்திய தொல்பொருள் ஆய்வுக் கூற்றின்படி).[1]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.