கற்கருவி

கற்கருவி என்பது பொதுவாக, பகுதியாகவோ முழுமையாகவோ கல்லால் செய்யப்பட்ட கருவியைக் குறிக்கும். கற்கருவிகளில் தங்கியிருக்கும் சமுதாயங்களும் பண்பாடுகளும் தற்காலத்திலும் இருந்தாலும், பெரும்பாலான கற்கருவிகள் ஏற்கனவே அழிந்து போய்விட்ட வரலாற்றுக்கு முந்திய, குறிப்பாகக் கற்காலப் பண்பாடுகளுடன் தொடர்புடையவை. இவ்வாறான வரலாற்றுக்கு முந்திய காலச் சமுதாயங்களைப் பற்றி ஆய்வு செய்யும் தொல்லியலாளர்கள், கற்காலக் கருவிகள் தொடர்பான ஆய்வை கற்பொருட் பகுப்பாய்வு என்கின்றனர். அம்புத்தலை, ஈட்டிமுனை, அரைக்கும்கல் போன்று வரலாறு முழுதும் பயன்பட்ட பலவகையான கருவிகள் கல்லால் செய்யப்பட்டன. பழங்கற்கால வரலாற்றுச் சான்றுகளில் மிகப் பெரும்பாலானவை கற்கருவிகளே.[1] கற்கருவிகள் தேய்கல்லினால் அல்லது உடைகல்லினால் செய்யப்பட்டன.

சில வரலாற்றுக்கு முந்தியகாலக் கற்கருவிகள்.

உடைகற் கருவிகள் தீக்கல், ரேடியோலைட், கல்செடோனி, பேசல்ட், குவாட்சைட், அப்சிடியன் போன்ற வகைக் கற்களில் இருந்து "பாறைக் குறைப்பு" என்னும் வழிமுறை மூலம் உருவாக்கப்பட்டன. ஒரு சம்மட்டிக் கல்லினால் அடித்து மூலக் கல்லில் இருந்து கல் துண்டுகளை உருவாக்குதல் ஒரு மிக எளிமையான பாறைக் குறைப்பு ஆகும்.

குறிப்புக்கள்

  1. பான், பவுல்., சுந்தர், கோ. (மொழிபெயர்ப்பு), தொல்லியல் மிகச் சுருக்கமான அறிமுகம், அடையாளம், 2007. பக். 33

கலைச்சொற்கள்

  • கற்பொருட் பகுப்பாய்வு - Lithic analysis
  • தேய்கல் - Grind Stone
  • உடைகல்- Chipped Stone
  • கல் துண்டு - Flake

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.