கர்நாடகா சட்டமன்ற தேர்தல், 2013

2013 கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே 5, 2013 அன்று நடந்தது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 223 தொகுதிகளுக்கு[1] நடந்த தேர்தலில் காங்கிரசு 121 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. ஆளும் பாஜக 40 தொகுதிகளில் மட்டுமே வென்றது. மதசார்பற்ற ஜனதா தளம் 40 தொகுதிகளில் வென்றது.

பிரியபட்டணா தொகுதியில் பாஜக வேட்பாளர் மரணமடைந்ததால் அங்கு தேர்தல் மே 28 அன்று நடைபெறும் [2].

கருநாடகத்தின் 4.18 கோடி வாக்காளர்களுக்கு 50,446 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. 223 தொகுதிகளில் மே 5 அன்று நடந்த தேர்தலில் 70.23% வாக்குப்பதிவு நடந்தது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. http://indiatoday.intoday.in/story/karnataka-assembly-polls-ananth-kumar-narendra-modi-rahul-gandhi/1/269152.html
  2. Piriyapatna was postponed to 28th May following the death of the BJP candidate.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.