கருநொச்சி
நொச்சியில் இரண்டு வகை உண்டு. ஒன்று வெண்ணொச்சி. மற்றொன்று கருநொச்சி (Vitex Negundo). வெண்ணொச்சி மரமாக வளரும். கருநொச்சி புதர்ச்செடி, வெண்ணொச்சி ஆற்றோரங்களில் வளரும். கருநொச்சி காடுமேடெல்லாம் வளரும். வெண்ணோச்சி மார்கள் வேலி பின்னவும், தட்டுக்கூடை பின்னவும் பயன்படும். கருநொச்சி மூலிகையாகவும், வயல்களுக்குத் தழையுரமாகவும் பயன்படுத்தப்படும். கருநொச்சியை மாடுகள் மேயும். வெண்ணொச்சியை வெள்ளாடு கூட ஓரிரு வாய்தான் கடிக்கும். கருநொச்சி இலையின் மணம் காரணமாகச் சில பூச்சிகள் இதனை நெருங்குவதில்லை. ஆதலால் தானியப் பாதுகாப்பில் கருநொச்சி இலை பயன்படுகிறது. ஓலைச் சுவடிகளைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் இதைப் பயன்படுத்தியுள்ளனர்.[1]
Vitex | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Lamiales |
குடும்பம்: | Lamiaceae |
பேரினம்: | Vitex L. |
இனங்கள் | |
About 250 species, including: |
சான்றாதாரங்கள்
- "Nirgundi (Vitex negundo) – Nature’s Gift to Mankind". asianagrihistory.org (ஆங்கிலம்) (1, 2015). பார்த்த நாள் 2016-10-23.
மேலும் பார்க்க
- நொச்சி வேலிகரு நொச்சி