கருங்குழி வெப்ப இயக்கவியல்

இயற்பியலில், கருங்குழி வெப்ப இயக்கவியல் என்பது, வெப்ப இயக்கவியலுக்கும், கருங்குழி (black hole) தொடர்பிலான நிகழ்வெல்லைக்கும் (event horizons) இடையில் உள்ள முரண்பாடுகளைத் தவிர்ப்பது தொடர்பான ஆய்வுகளைச் செய்யும் ஒரு துறையாகும். கரும்பொருள் தொடர்பிலான புள்ளியியல் விசைப்பொறியியல் (statistical mechanics) ஆய்வுகள் சிப்பவிசையியலின் (quantum mechanics) உருவாக்கத்துக்கு வித்திட்டது போலவே, கருங்குழி சார்ந்த புள்ளியியல் விசைப்பொறியியல் ஆய்வுகள், சிப்ப ஈர்ப்புப் (quantum gravity) பற்றிய நமது அறிவில் ஆழமான தாக்கத்தை உருவாக்கியுள்ளதுடன் முழுவரைவியக் கொள்கை (holographic principle) ஒன்றின் தோற்றத்துக்கும் வித்திட்டுள்ளது.

வெப்ப இயக்கவியல் விதிகளோடு ஒத்துப்போகின்ற, இரு கருங்குழிகள் இணையும் செயல்முறை ஒன்றைக் காட்டும் ஒரு ஓவியரின் படைப்பு.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.