கரிச்சான் குஞ்சு
ஆர். நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு (ஜூலை 10, 1919 - 1992) ஒரு தமிழ் எழுத்தாளர்.

கரிச்சான்குஞ்சு
வாழ்க்கை வரலாறு

மனைவியோடு கரிச்சான்குஞ்சு
நாராயணசாமி தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் வட்டம், சேதனீபுரத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் ராமாமிருத சாஸ்திரி- ஈஸ்வரியம்மாள். எட்டு வயது முதல் பதினைந்து வயது வரை பெங்களூரில் வேதமும் வடமொழியும் கற்றார். மதுரை ராமேஸ்வர தேவஸ்தான பாடசாலையில் ஐந்தாண்டுகள் (17 முதல் 22 வயது வரை) தமிழ் பயின்றார்.

கரிச்சான் வீடு
கு. ப. ராஜகோபாலனின் (கு.ப.ரா) சீடர்களுள் ஒருவராக இருந்த நாராயணசாமி அவர் மீது கொண்ட பற்றால் “கரிச்சான் குஞ்சு” என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். (கு.ப.ராவின் புனைப்பெயர் “கரிச்சான்”). இவரின் துணைவியார் பெயர் சாரதா. இவருக்கு லக்ஷ்மி பேபி, பிரபா, விஜயா, சாந்தா என்கிற நான்கு மகள்கள் உண்டு.

குடும்பம்
படைப்புகள்
சிறுகதைத் தொகுதிகள்
- எளிய வாழ்க்கை முதலிய கதைகள்- காதல் கல்பம் (1955)
- வம்சரத்தினம் (பிப்.1964)
- குபேர தரிசனம் (மார்ச். 1964)
- தெய்வீகம் (மார்ச். 1964)
- அம்மா இட்ட கட்டளை (ஜுன் 1975)
- அன்றிரவே (ஆகஸ்ட் 1983)
- கரிச்சான்குஞ்சு கதைகள் (1985)
- தெளிவு (டிசம்பர் 1989)
- எது நிற்கும் (ஜன.2016)
புதினங்கள்
- பசித்த மானுடம் (ஆகஸ்ட் 1978)
குறும்புதினம்
- சுகவாசிகள் (டிச.1990)
நாடகம்
- கழுகு (ஜுலை 1989)
- காலத்தின்குரல்
மொழிபெயர்ப்புகள்
- பெண்ணின் பெருமை - சரத்சந்திரர்
- இந்தியத் தத்துவ இயலில் அழிந்திருப்பனவும் நிலைத்திருப்பனவும் - தேவி ப்ரசாத் சட்டோபாத்யாயா”
- தொனி விளக்கு - ஆனந்த வர்த்தனர்"
- சூரியகாந்திப்பூவின் கனவ ஸையத் அப்துல் மலிக்"
- க்ஷேமேந்திரர்
- சங்கரர்
கட்டுரை நூல்கள்
- பாரதியார் தேடியதும் கண்டதும் (செப்டம்பர் 1982)
- கு.ப.ரா
மேற்கோள்கள்
- பசித்த மானிடம்பசித்த மானுடம்- காலச்சுவடு கிளாசிக் வரிசை (2005)
- கரிச்சான் குஞ்சு - தோற்றம் தரும் முரண்கள், வெங்கட் சாமிநாதன்
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.