கரடிப் பேரேரி

கரடிப் பேரேரி (Great Bear Lake) முழுமையாகக் கனடாவில் இருக்கும் மிகப் பெரிய ஏரியாகும். கனடா-ஐக்கிய அமெரிக்க எல்லையில் அமைந்து கனடாவுக்குள் ஒரு பகுதி மட்டுமே இருக்கும் சுப்பீரியர் ஏரி, ஹூரோன் ஏரி என்பவை இதை விடப் பெரியவை. இது வட அமெரிக்காவின் மூன்றாவது பெரியதும், உலகின் ஏழாவது பெரியதுமான ஏரியாகும். ஆர்க்டிக் வட்டத்தில் 65 - 67 பாகை வடக்கு அகலக்கோடுகளுக்கும், 118 - 123 பாகை மேற்கு நெடுங்கோடுகளுக்கும் இடைப்பட்ட இடத்தில் அமைந்துள்ள இவ்வேரி கடல் மட்டத்திலிருந்து 186 மீ (610 அடி) உயரத்தில் உள்ளது.

கரடிப் பேரேரி
நிலப்படம்
ஆள்கூறுகள்66°N 121°W
முதன்மை வெளிப்போக்குகிரேட் பெயர் ஆறு
வடிநிலப் பரப்பு114,717 km² (44,293 mi²)[1][2]
வடிநில நாடுகள்கனடா
Surface area31,153 km² (12,028 mi²)[1][2]
சராசரி ஆழம்71.7 m (235 ft)[1][2]
அதிகபட்ச ஆழம்446 m (1,463 ft)[1][2]
நீர்க் கனவளவுவார்ப்புரு:Km3 to mi3[1][2]
நீர்தங்கு நேரம்124 ஆண்டுகள்[1]
கரை நீளம்12,719 km (1,690 mi) (+ 824 km (512 mi) தீவுகளின் கரையோரம்)[1][2]
கடல்மட்டத்திலிருந்து உயரம்186 மீ (610 அடி)
Islands26 முக்கியமான தீவுகள், மொத்தம் 759.3 கிமீ² பரப்பளவு[1]
Settlementsடிலைன், எக்கோ குடா
1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவல்ல.

இந்த ஏரி 31,153 km² (12,028 mi²) மேற்பரப்பளவும் 2,236 கிமீ³ (536 மை³) மொத்த நீர்க் கொள்ளளவும் உடையது. இதன் அதிக பட்ச ஆழம் 446 மீ (1,463 அடி). சராசரி ஆழம் 71.7 மீ (235 அடி). 2,719 கிமீ (1,690 மை) மொத்தக் கரையோர நீளத்தைக் கொண்ட இவ்வேரியின் நீரேந்து பகுதி 114,717 கிமீ² (44,293 மை²) ஆகும்.

இவ்வேரி நீர் கிரேட் பெயர் ஆற்றினூடாக மக்கன்சி ஆற்றினுள் வெளியேறுகிறது. தென்மேற்கு முனையில் உள்ள, டிலைன், தென்மேற்கு ஆட்சிப்பகுதி மட்டுமே இந்த ஏரிக்கரையில் உள்ள ஒரே குடியிருப்புப் பகுதியாகும்.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

மேற்கோள்கள்

  1. Johnson, L. (1975), "Physical and chemical characteristics of Great Bear Lake", J. Fish. Res. Board Can. 32: 1971-1987 quoted at கிரேட் பெயர் ஏரி (உலக ஏரிகள் தரவுத்தளம்)
  2. Hebert, Paul (2007), "Great Bear Lake, Northwest Territories", Encyclopedia of Earth, Environmental Information Coalition, National Council for Science and the Environment, http://www.eoearth.org/article/Great_Bear_Lake,_Northwest_Territories
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.